வாயில் எச்சில் ஊறவைக்கும் மாங்காய் வெந்தய சட்னி
இந்த முறை ரெசிபியில் மிகவும் வித்தியாசமான முறையில் மாங்காயை வைத்து மாங்காய் வெந்தய சட்னி செய்யலாம்.
மாங்காய் வெந்தயம் சட்னி
தினமும் ஒரே மாதிரியான சட்னி, குழம்பு செய்து சலிப்போட்டதா? அப்படியானால் இந்த முறை சுவையும், தனித்துவமும் நிறைந்த மாங்காய் வெந்தயம் சட்னி செய்து பாருங்கள்.
புளிப்பு மாங்காயின் துவர்ப்பும், வெந்தயத்தின் சற்று கசப்பும் சேரும் இந்த சட்னி சாதத்தில் கலந்து சாப்பிட்டால், சாதம் அமிர்தமாக இருக்கும். இது தவிர சப்பாத்தி, தோசைக்கும் ஒரு அருமையான சட்னியாகும்.
தேவையான பொருட்கள்
- உளுத்தம் பருப்பு- 1 மேஜைக்கரண்டி
- காய்ந்த மிளகாய்- 10
- வெந்தயம்- 1 மேஜைக்கரண்டி
- தேங்காய் துருவல்- சிறிது
- கருவேப்பிலை- தேவையான அளவு
- பெருங்காயம்- சிட்டிகை
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்- தாளிக்க
செய்யும் முறை
மாங்காயை தோலுடன் துருவிக்கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் உளுந்தம் பருப்பு, மிளகாய், வெந்தயம், கறிவேப்பிலை, தேங்காய், பெருங்காயம் சேர்த்து போட்டு சிவக்க வறுக்கவும்.
அதில் துருவிய மாங்காய், உப்பு போட்டு சுருள வதக்கி, ஆறியதும் மிக்ஸியில் அரைத்து எடுக்கவும், சுவையான மாங்காய் வெந்தயம் சட்னி தயார். இதை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம், சப்பாத்தி, தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
இதை வெறும் சாதத்தில் கலந்து சாப்பிடலாம் சப்பாத்தி, தோசை, இடியாப்பம், சாதம்… எதற்கும் பொருத்தமான சட்னி இது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
