நடிகர் சிம்பு இந்த முறையில் தான் உடல் எடையை குறைச்சாரா? நீங்களும் ஈஸியா எடையை குறைக்கலாம்
பொதுவாகவே தற்காலத்தில் உடல் எடை அதிகரிப்பு அனைவரின் மத்தியிலும் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது.
எடையை குறுகிய காலத்திற்குள் குறைக்க வேண்டும் என்பதற்காக பலரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதும் எதிர்ப்பார்த்த விளைவை பெருவது அவ்வளவு எளிதான விடயமாக இருப்பதில்லை.
இருப்பினும் நடிகர் சிம்பு உடல் எடையைக் குறைப்பதற்கு முன் 101 கிலோ இருந்திருக்கிறார். அதிலிருந்து 30 கிலோ எடையைக் குறைத்து 71 கிலோ வந்திருக்கிறார். அதற்கு அவர் மேற்கொண்ட முறை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
சிம்புவின் உடல் எடை குறைப்பு
சிம்பு தனது உடல் எடையைக் குறைப்பதற்காக தினமும் அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து நடைப்பயிற்சி செய்ய ஆரம்பிப்பாராம். நடைபயிற்சி முடிந்தவுடன் உடலில் இருக்கும் தசைகள் எல்லாவற்றும் ஊக்கம் கொடுக்கும் வகையில் உடற்பயிற்சி செய்வாராம்.
வாரத்தில் இரண்டு நாட்களைத் தவிர ஐந்து நாட்களும் உடற்பயிற்சி செய்வாராம். எடை அதிகரிக்க முக்கிய காரணங்களில் ஒன்று தான் துரித உணவுகளும் நான்வெஜ் சாப்பாடுகளும் தான். அதனால் எடையைக் குறைப்பதற்காக வெஜிட்டேரியனாக மாறியிருக்கிறார்.
உடற்பயிற்சி, நடைப்பயிற்சியை தவிர உடலுக்கு ஊக்கம் கொடுக்கும் விளையாட்டுகளிலும் ஈடுபட்டு வந்தாராம். அதாவது கிரிக்கெட், பாட்மிட்டன், டென்னிஸ் போன்ற விளையாட்டுக்களை விளையாட்டு உடலுக்கு அதிக உழைப்பைக் கொடுப்பாராம்.
இவர் எடையைக் குறைப்பதற்காக சிம்பு வீட்டிலேயே சமைத்து சாப்பிட்டாராம். மரக்கறிகளும், பழக்களும், கீரை வகைகளும் அதிகம் எடுத்துக் கொண்டாராம்.
குறிப்பாக திரவ வகை உணவுகளைதான் அதிகமாக சாப்பிட்டார். பழ வகைகளில் கூட சாலட் சாப்பிடாமல் ஜூஸாக சர்க்கரை இல்லாமல் குடித்துள்ளார்.
அதிக புரோட்டீன் நிறைந்த மற்றும் குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட உணவு என முற்றிலும் தன் உணவுப் பழக்கத்தையே மாற்றிக்கொண்டார்.
அதனால்தான் குறுகிய நாட்களில் அவருடைய உடல் எடையில் இத்தனை பெரும் மாற்றத்தைக் காண முடிந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |