ரிவென்ஞ்னா இப்படி இருக்கனும்.... வைரலாகும் ஆர்த்தி ரவியின் கூலான பதிவு
விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் ஆர்த்தி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடும் பதிவுகள் இணையவாசிகளின் கவனத்திற்கு சென்று வருவது வழக்கம்.
இந்நிலையில் ஆர்த்தி ரவி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
ரவி மோகன்
தமிழ் சினிமா முன்னணி நடிகர்களின் பட்டியலில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் ரவி மோகன். கடந்த ஆண்டு இறுதியில் திடீரென பெயரை மாற்றினார், இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் தனித்துவமான பாணியில் இருப்பதால் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
ரவியின் விவாகரத்து அறிவிப்பு வெளியான சமயத்தில், அவர் கோவாவை சேர்ந்த கெனிஷா என்ற பாடகியுடன் தொடர்பில் இருப்பதாக வதந்திகள் பரவி இணையத்தில் புயலை கிளப்பியது.
சமீபத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகளின் திருமணம் நடந்தது. இதில், கோல்டன் நிற ஆடை அணிந்து ரவி மோகனும் கெனிஷாவும் கலந்து கொண்டனர்.
போதாக்குறைக்கு இருவரும் கைக்கோர்த்துக்கொண்டு வேறு சென்றனர். இது குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலானது.
அதனை தொடர்ந்து ஆர்த்தி, ரவி மோகன் குறித்து ஒரு பரப்பான அறிக்கையை வெளியிட்டார். பின்னர் தான் முதுகில் குத்தப்பட்டுவந்ததாகவும் தற்போது நெஞ்சில் குத்தப்படுவதாகவும் குறிப்பிட்டு ரவி மோகன் அறிக்கை வெளியிட்டார்.
இவர்கள் இருவரும் ஒருவறை ஒருவர் குறை கூறிக்கொண்டு அறிக்கை வெளியிட்ட வண்ணம் இருந்தனர்.தற்போது இருவரும் அவர்கள் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
பாடகி கெனிஷா ஃபிரான்சிஸ் மற்றும் நடிகர் ரவி மோகன் அண்மையில் இலங்கை சென்ற புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் மீண்டும் சர்ச்சையை கிளப்பியது.
ஆனால் அர்த்தி ரவி எதையுமே கண்டுக்கொள்ளாமல் அமைதியாகவும் பக்குவமாகவும் கடிகமான சூழ்நிலைகளை கடந்து வருகின்றார்.
இந்நிலையில், ஆர்த்தி ரவி அவரது இன்ஸ்டா தளத்தில் செம கூலாக தற்போது வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |