குளிர்காலத்தில் ஆண்களுக்கு கை கொடுக்கும் உளுத்தம் பருப்பு: அவசியத்தை தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக சைவ பிரியர்களுக்கு புரத சத்தை அள்ளிக் கொடுக்கும் தானியங்களில் ஒன்றாக உளுந்து காணப்படுகின்றது.
இதில், சுமார் 25 கிராம் புரதம், வைட்டமின் பி, காம்ப்ளக்ஸ், இரும்பு, தாமிரம், கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்ட ஊட்டசத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.
இவ்வளவு ஊட்டசத்துக்களை தன்னுள் வைத்திருக்கும் உளுந்தம் பருப்பை குளிர்காலங்களில் மக்கள் அதிகமாக பயன்படுத்துவார்கள். இது சுவையுடன் கூடிய ஆரோக்கியத்தை கொடுக்கிறது.
அந்த வகையில் உளுந்தம் பருப்பை பெண்களை விட ஆண்கள் அதிகமாக சாப்பிட வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அப்படியாயின் உளுந்தம் பருப்பில் ஆண்களுக்கு உதவும் வகையில் அப்படி என்ன நன்மை இருக்கின்றது என்பதனை பதிவில் பார்க்கலாம்.
உளுந்தம் பருப்பு
1. சைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்களுக்கு அசைவத்திற்கு நிகரான புரதச்சத்தை உளுந்தம் பருப்பு வழங்குகின்றது. அத்துடன் குளிர்காலத்திற்கு தேவையான ஆற்றலை இதிலிருந்து பெற்றுக் கொள்ள முடியும்.
2. மலச்சிக்கல், ஆஸ்துமா மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட நோய்கள் உள்ளவர்கள் இந்த பருப்பை தாரளமாக எடுத்து கொள்ளலாம். உங்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு இதிலிருக்கும் ஊட்டச்சத்துக் கொடுக்கும்.
3. உளுந்தம் பருப்பில் இருக்கும் சில சத்துக்கள் பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மையை சரிச் செய்து இனப்பெருக்க உறுப்புகளை பலப்படுத்துகிறது.
4. குளிர்காலத்தில் உளுந்தம் பருப்பை சாப்பிடுவதால் உடலில் இருக்கும் கதகதப்பு அதிகமாகின்றது.
5. திருமணமான ஆண்களுக்கு இருக்கும் விறைப்புத்தன்மை, குறைந்த விந்தணு எண்ணிக்கை மற்றும் இயக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உளுந்தம் பருப்பு உதவியாக இருக்கின்றது. இந்த கூற்றை ஆயுள் வேத ஆராய்ச்சியாளர்கள் உறுதிச் செய்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |