நீரிழிவு நோயை அடித்து விரட்டி உடல் சக்தியை அதிகரிக்க உதவும் வியக்க வைக்கும் இயற்கை பொடிகள்
தூதுவளை, வல்லாரை, அருகம்புல், கடுக்காய், வில்வம், நாவல் என பல இயற்கை பொடிகள் உடலுக்கு பல நன்மைகளை விளைவிக்கின்றன.
நீரிழிவு, ஆண்மை குறைபாடு, இரத்த கொதிப்பு, சளி, காய்ச்சல் என சிறிய பிரச்சனையில் இருந்து, பெரிய பெரிய பிரச்சனைகள் வரை அனைத்திற்கும் நாம் ஆங்கில மருத்துவத்தை தேடி ஓடுகிறோம்.
இனி, எந்த பக்க விளைவுகளும் அற்ற, நாமே வீட்டில் எளிதாய் தயாரிக்க கூடிய இயற்கை பொடிகளின் பயன்கள் குறித்து பார்க்கலாம்...
நவால் பொடி
சர்க்கரை நோய் கட்டுக்குள் வைக்கவும், தலைசுற்றுலை தடுக்கவும் சிறந்த பயன் தருகிறது நாவல் பொடி.
நெல்லிக்காய் பொடி
பற்கள், எலும்புகளின் வலுவினை அதிகரிக்க நெல்லிக்காய் பொடியில் இருக்கும் வைட்டமின் "சி" பயனளிக்கிறது.
கடுக்காய் பொடி
கடுக்காய் போடி குடல் புண்ணை ஆற்றவும், மலமிளக்க பிரச்சனைக்கு தீர்வு காணவும் உதவுகிறது.
வில்வம் பொடி
அதிகமான கொழுப்பை குறைக்குவும், இரத்த கொதிப்பை கட்டுப்படுத்தவும் வில்வம் பொடி சிறந்தது.