சர்க்கரை நோயாளிகளே! தினமும் இந்த தண்ணீர் போதும் மாத்திரைக்கு குட்பை சொல்லலாம்
வெந்தயம் நமது வீட்டில் அஞ்சலறைப்பெட்டியில் இருக்கும் முக்கிய பொருளில் ஒன்று. அதிக இரும்புச் சத்து கொண்டது. குளிர்ச்சித் தன்மை கொண்டவை.
அதில் புரதமும் இருக்கின்றது. பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற மினரல்கள் செல் வளர்ச்சிக்கு மிகவும் உதவுபவை. இவை வெந்தயத்தில் உள்ளது.
அப்படி அரிய நன்மைகளைக் கொண்டுள்ள வெந்தயத்தை பச்சையாக சாப்பிடக் கூடாது. ஊற வைத்து அல்லது வறுத்து பொடித்து உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
தினமும் இரவில் கால் ஸ்பூன் அளவு வெந்தயத்தை ஊற வைத்துவிட வேண்டும். மறுநாள் காலையில் இதனை நீருடன் மென்று சாப்பிட வேண்டும். இப்படி ஊற வைத்த வெந்தயம் பலமடங்கு நன்மைகளை உடலுக்கு தருகிறது.
சர்க்கரை வியாதி
தினமும் 8 கிராம் அளவு வெந்தயம் உங்கள் சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும் தெரியுமா?. ஊற வைத்த வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் சர்க்கரை நோயாளிகள் மாத்திரைகளை முழுங்கத் தேவையில்லை.
உடல் எடை
உடலிலுள்ள ஊளைச் சதையை வெந்தயம் கரைக்கிறது. கெட்ட கொலஸ்ட்ராலை வேகமாக எரிப்பதால் உடல் எடையை குறைக்கும். தொடர்ந்து ஊற வைத்து காலையில் நீருடன் வெந்தயத்தையும் மென்று சாப்பிட வேண்டும்.
இதய நோய்கள்
வெந்தயத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் சோடியல் அளவை கட்டுப்படுத்தி, இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறைக்கிறது.
மலச்சிக்கல்
வெந்தயத்தில் கரையும் நார்ச்சத்து இருப்பதால், இதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.
வயிற்றுப் புண்
இரைப்பையில் சுரக்கும் அதிக அமிலத்தைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் வயிறு மற்றும் இரைப்பை புண்களை ஆற்றும்.
ரத்த சோகை
ரத்த சோகை இருப்பவர்களுக்கு இந்த ஊற வைத்த வெந்தயம் அருமருந்து. தொடர்ந்து ஊற வைத்த வெந்தயத்தை சாப்பிட்டு வரும்போது, மாத்திரையின்றி, ரத்த சோகையை குணப்படுத்தலாம்.