தமிழர்கள் அதிகம் சேர்த்து உண்ணும் உணவில் அதிகம் ரசம் சேர்ப்பது ஏன்? புற்றுநோயே அலண்டு ஓடும்!
health
food
By Nivetha
தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு சமையல் தான் ரசம்.
இத்தகைய ரசம் தென்னிந்தியாவில் வடை பாயாசத்துடன் கொடுக்கப்படும் ஒவ்வொரு விருந்திலும் அவசியம் இருக்கும். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு வீட்டிலும் மதிய வேளையில் ரசம் அவசியம் சமைத்து சாப்பிடப்படுகிறது.
பலருக்கு மதிய வேளையில் ரசம் இல்லாவிட்டால் சாப்பாடே வயிற்றில் இறங்காது. இங்கு அத்தகைய ரசத்தை அன்றாடம் சிறிது உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
- ரசமானது வயிற்றுப்போக்கு, அசிடிட்டி, வாயுத் தொல்லை, செரிமான பிரச்சனை போன்றவற்றில் இருந்து உடனடி நிவாரணம் வழங்கக்கூடியவை.
- ரசம் உட்கொண்டு வந்தால், புற்றுநோயின் தாக்கம் குறையும். இதற்கு முக்கிய காரணம், ரசத்தில் சேர்க்கப்பட்டுள்ள மஞ்சள் மற்றும் மிளகு தான். இவையே புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும்.
- குடலியக்கம் சீராக இயங்கி, மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கலாம். அதிலும் மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படும் போது, சூடாக ஒரு கப் ரசம் குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். இதற்கு முக்கிய காரணம் ரசத்தில் சேர்க்கப்பட்டுள்ள புளி தான்.
- ரசத்தில் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளது. பலருக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் ரசத்தில் ஆன்டி-ஆக்ஸிடண்ட் அதிகம் நிறைந்த புளி இருப்பதால், அது சருமத்திற்கு மிகவும் நல்லது.
- ரசத்தில் முக்கியமான வைட்டமின்களான ரிபோப்ளேவின், நியாசின், வைட்டமின் ஏ மற்றும் சி, ஃபோலிக் ஆசிட் மற்றும் தியாமின் போன்றவைகள் அதிகம் நிறைந்துள்ளது.
- அன்றாடம் ரசத்தை உணவில் சேர்த்து வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம். எப்படியெனில் ரசம் சேர்ப்பதால், உடலில் தங்கியுள்ள டாக்ஸின்கள் வெளியேறும். அதிலும் அந்த டாக்ஸின்களானது வியர்வையின் மூலமாகவும், சிறுநீரின் வழியாகவும் வெளியேறும்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US