வைட்டமின் D2 எடுத்துக்கிட்டா எடை குறையுமா? யாமறியாத 6 சீக்ரெட்ஸ்
பொதுவாக வைட்டமின்கள் எனக் கூறும் போது இரண்டு வகையான வைட்டமின்கள் இருக்கின்றன.
அதாவது, கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் ஏ, டி, இ, கே ஆகும். தண்ணீரில் கரையக்கூடிய வைட்டமின்கள் வைட்டமின்கள் - பி1, பி6, பி7, பி 12 பிரிவுகள், வைட்டமின் சி ஆகும். இவை அனைத்தும் மனித உடலுக்கு அவசிமானது தான்.
தேவையான வைட்டமின்களை உடல் தேக்கி வைத்து கொண்டு தேவையில்லாதவற்றை வெளியேற்றி விடும். இதற்காக வைட்டமின்கள் சாப்பிடுவதை நிறுத்தக் கூடாது.
கண்டிப்பாக தினமும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.
அதே நேரம் வைட்டமின் அதிகமாகவோ குறையவோ கூடாது. அது உடல் பணிகளை பாதிக்கும்.
அந்த வகையில் வைட்டமின் D2 உடலில் குறைந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுத்தும்? எந்த உணவில் வைட்டமின் D2 இருக்கின்றது? வைட்டமின் D2 அதிகரித்தால் அதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பதனை பூரண விளக்கத்துடன் பார்க்கலாம்.
வைட்டமின் D2 குறைபாடு
1. பொதுவாக மனித உடலில் வைட்டமின் D2 குறைபாடு ஏற்பட்டு விட்டால் அவர்களின் உடலில் இருக்கும் நோயெதிர்ப்பு சக்தி நாளடைவில் குறைய ஆரம்பிக்கும்.
2. வைட்டமின் D2 ஏற்பட்டால் டைப் 1 சர்க்கரை நோய், எலும்பு பாதிப்பு நோய், குடல் செயல்பாடுகள் தொற்று நோய் உள்ளிட்டவையும் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
3. கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உறிஞ்சுதலை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வைட்டமின் D2ற்கு இருக்கின்றது. இதனால் அடிக்கடி வைட்டமின் D2 கலந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.
4. மன அழுத்தம் பிரச்சினைக்கு வைட்டமின் D2 குறைபாடும் ஒரு காரணம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். இது தொடர்பான சிகிச்சைகளை மேற்கொள்ளும் போது சிறந்த மாற்றத்தை காணலாம்.
5. உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் வைட்டமின் D2 கலந்த வில்லைகள் அல்லது உணவுகளை எடுத்து கொள்ளலாம். டயட் + வைட்டமின் D2 இவை இரண்டையும் சரிக்கு சமமாக எடுத்து கொள்ளும் போது சிறந்த பலனை அவதானிக்கலாம்.
6. வைட்டமின் D2 குறைபாடு எலும்பு பலவீனம் மற்றும் எலும்பு அடர்த்தி குறைவு ஆகிய பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனை சரிச் செய்வதற்காக சப்ளிமென்டுகளை மருத்துவரின் ஆலோசனையின் படி எடுத்து கொள்வது சிறந்தது.
7. ஈறுபிரச்சனை உள்ளிட்ட பற்கள் சார்ந்த எண்ணற்ற பிரச்சனைகள் ஏற்படும். இதனை கட்டுக்குள் வைக்க வேண்டும் வைட்டமின் D2 குறைபாடு ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும். தினசரி எடுத்து கொள்ளாவிட்டால் பற்கள் சேதமடைதல், வளர்ச்சி குறைபாடு, பலவீனம் போன்றவையும் ஏற்படும்.
8. உயர் ரத்த அழுத்தம், இதய செயலிழப்பு, ஸ்ட்ரோக் போன்ற இதயம் சார்ந்த நோய்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றன.
வைட்டமின் D2 எவ்வளவு தேவை?
குழந்தைகள் மற்றும் டீனேஜ் பிள்ளை - 15 மைக்ரோகிராம்
18 முதல் 70 வயது வரை- 15 மைக்ரோகிராம்
முதிர்ந்தவர்கள் - 20 மைக்ரோகிராம்
கர்ப்பிணி மற்றும் தாய்ப்பாலூட்டும் பெண்கள் -15 மைக்ரோகிராம்
0-12 மாத குழந்தை- 0 மைக்ரோகிராம்
வைட்டமின் D2 உள்ள உணவுகள்
- சோயா, பாதாம், ஓட்ஸ்
- பால்
- ஆரஞ்சு ஜூஸ்
- கானாங்கெளுத்தி
- முட்டை
- காளான்
- ஹார்ட் லிவர் எண்ணெய்
- மத்தி
- வலுவூட்டப்பட்ட தானியங்கள்
- சால்மன்
- மாட்டிறைச்சியின் கல்லீரல்