எலும்பு ஆரோக்கியத்தை பலப்படுத்தும் வைட்டமின் வைட்டமின் பி12 (Vitamin B12): நன்மைகளும் அறிகுறிகளும்
நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் சிறப்பாக செயற்படுவதற்கு ஊட்டச்சத்துக்கள் மிக அவசியமாகும். இந்த ஊட்டச்சத்துக்கள் நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளைப் பொறுத்தது தான்.
அந்தவகையில் உடலுக்கு தேவையான மிக முக்கியமான எட்டு ஊட்டச்சத்துக்களில் தனித்துவமான பங்கை கொண்டிருப்பது தான் வைட்டமின் பி12 சத்து. வைட்டமின் பி 12 என அறியப்படும் கோபாலமின் என்ற அத்தியாவசிய ஊட்டச்சத்து, இது நீரில் கரையக்கூடியது, உங்கள் உடலுக்கு பல வழிகளில் பயனளிக்கிறது.
வைட்டமின் பி 12 நன்மைகள்
வைட்டமின் பி 12 உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நிறைய நன்மையைக் கொடுக்கிறது.
- இது இரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவுகிறது.
- மெகாலோபிளாஸ்டிக் அனீமியா எனப்படும் இரத்த சோகையை தடுக்கிறது.
- இது மூளை மற்றும் நரம்புகளை ஆரோக்கியமாக வைக்கிறது.
- நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.
- ஹோமோசைஸ்டீனைக் குறைப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
- மனநிலையை மேம்படுத்தும் ரசாயனமான செரோடோனின் தயாரிக்க உதவுகிறது.
- இதனால் மனச்சோர்வு அபாயத்தைக் குறைக்கிறது.
- வயது தொடர்பான மாகுலர் சிதைவின் வளர்ச்சியையும் தடுக்கிறது.
- எலும்பு ஆரோக்கியத்தை பலப்படுத்துகிறது.
- ஆற்றல் ஊக்கத்தை அளிக்கிறது.
- இது ஆரோக்கியமான முடி, தோல் மற்றும் நகங்களை ஊக்குவிக்கிறது.
வைட்டமின் பி12 குறைபாடுகளின் அறிகுறி
- பலவீனம் மற்றும் சோர்வு
- மலச்சிக்கல்
- எடை இழப்பு
- பசியின்மை
- வெளிறிய தோல்
- வேகமான இதயத் துடிப்பு
- மூச்சு திணறல்
- மெகாலோபிளாஸ்டிக் அனீமியா நரம்பு பிரச்சினைகள்
- கை மற்றும் கால்களில் உணர்வின்மை
- குளோசிடிஸ் மற்றும் வாய் புண்கள் மங்கலான பார்வை குழப்பம்
- மனச்சோர்வு மற்றும் மனநிலை மாற்றங்கள்
வைட்டமின் பி12 உணவுகள்
நிறைய உணவுகளில் டி வைட்டமின்கள் உள்ளன. டி வைட்டமின்களை பலவகையான உணவு மூலங்களிலிருந்து பெறுவது சிறந்தது.
அந்தவகையில் வைட்டமின் டி குறைப்பாடு இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் இவை தான் மாட்டிறைச்சி, கோழியின் நெஞ்சுப்பகுதி, கிளாம், சால்மன் மீன், மத்தி மீன்கள், சூரை மீன், பால், முட்டைகள், கிரேக்க தயிர், வலுவூட்டப்பட்ட ஊட்டச்சத்து ஈஸ்ட் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |