நரம்பு பிரச்சினையை தீர்க்கும் வல்லாரையை சாப்பி்ட்ட முனிவர் 200 வருடம் வாழ்ந்த அதிசயம்! இவ்வளவு நன்மையா?
health
food
vallarai
By Nivetha
எல்லாருக்கும் வல்லாரை கீரை பற்றி நன்றாகத் தெரிந்திருக்கும். நினைவாற்றல் மற்றும் நீண்ட தூர ஆயுளை தரக் கூடிய சக்தி வாய்ந்த மூலிகை ஆகும்.
இந்த மூலிகை பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவத்தில் மிகவும் பிரபலமான ஒன்று.
வல்லாரை கீரையின் நன்மைகள்
- இந்த மூலிகை குறித்து நிறைய புராணக்கதைகள் உள்ளன. 1800 இன் பிற்பகுதியில் பிரெஞ்சுக்காரர்கள் தோலில் ஏற்பட்ட காயங்களைக் குணப்படுத்த இதைப் பயன்படுத்திய போது, அந்தச் செடியை சாப்பிட்ட யானைகளின் ஆயுள் அதிகரித்ததாக நம்பப்படுகிறது.
- அதே மாதிரி சீன நாட்டில் உள்ள பிரபலமான முனிவர் இந்த மூலிகையை சாப்பிட்டு 200 வயதுக்கு மேல் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.
- அதனால் தான் இதை சீன மருத்துவத்தில் வாழ்வின் அதிசய அமுதம் என்று கூறுகின்றனர்.
- எனவே இந்த வல்லாரை கீரை கொண்டு எப்படி சுருக்கங்கள் இல்லாத சருமத்தை பெற முடியும் என கூறுகிறார் சரும மருத்துவர்.
- இதுவரை உடல் நல ஆரோக்கியத்திற்காக பயன்படுத்தி வந்த இந்த மூலிகை தற்போது சரும அழகு பராமரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.
- இந்த மூலிகையை சருமம் வயதாகுவதை தடுக்கும் ஆன்டி ஏஜிங் க்ரீம்களிலும், சூரிய ஒளி பராமரிப்பு பொருட்களிலும் பயன்படுத்தி வருகின்றனர்.
- இது சருமத்தின் நெகிழ்வுத் தன்மையை மேம்படுத்தும் கொலாஜன் உற்பத்தியை தூண்டுகிறது. சருமத்தில் உள்ள தழும்புகளை போக்க உதவுகிறது.
- ஆன்டி ஆக்ஸிடன்களை அதிகரித்து புதிய சரும செல்கள் உருவாக்கத்திற்கு உதவுகிறது. சரும செல்கள் இறுக்கமடையவும், சருமம் தொய்வடைவதை தடுக்கவும் உதவுகிறது.
நரம்புகளைச் சரிசெய்ய
வல்லாரை சருமத்தில் உள்ள நரம்புகளைச் சரிசெய்ய உதவுகிறது.
தோலில் வீங்கி பருத்து வலிக்கும் நரம்புகளை சரி செய்ய உதவுகிறது. சருமத்தின் கீழ் கொழுப்பு செல்களை பிணைக்கும் இணைப்பு திசுக்களை சுருக்கி தோலில் ஏற்படும் செல்லுலைட்டை உடைக்க உதவுகிறது.
எனவே பெண்களே இனி உங்க சரும பராமரிப்பில் மறக்காமல் வல்லாரையை சேர்த்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US