muttaikose poriyal: புற்றுநோயை செல்களின் வளர்ச்சியை தடுக்கும் முட்டைக்கோஸ் பொரியல்... எப்படி செய்வது?
பொதுவாக எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடிய காய்கறிகளின் பட்டியலில் முட்டைகோஸ் முக்கிய இடம் வகிக்கின்றது.
அதில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின்களான ஏ, சி மற்றும் கே போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகளவு காணப்படுவதால் இதனை சாப்பிட்டால், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் வளர்வதை முற்றிலும் தடுக்கும்.
மேலும் நார்சத்துகளை அதிகம் கொண்டுள்ளதால் செரிமான பிரச்சினை மற்றும் மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கின்றது.
உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என நினைப்பவர்களுக்கும் முட்டைகோஸை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்த பலனை கொடுக்கும்.
முட்டைகோஸில் வைட்டமின் சி செரிவாக காணப்படுவதால், அதனை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால், உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமடைந்து தொற்று நோய்களில் இருந்து முழுமையான பாதுகாப்பு கிடைக்கும்.
இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த முட்டைக்கோஸை கொண்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பும் வகையில் முட்டைக்கோஸ் பொரியலை அசத்தல் சுவையில் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்
முட்டைக்கோஸ் - 2 கப் துருவியது
பட்டாணி - கால் கப்
இஞ்சி-1 துண்டு
வெங்காயம் - 1 நறுக்கியது
மஞ்சள் தூள் -1 ஸ்பூன்
தேங்காய் - கால் கப் துருவியது
பச்சை மிளகாய் -4
உப்பு- தேவையான அளவு
தாளிக்க தேவையானவை
எண்ணெய் -2 தே.கரண்டி
கடுகு -அரை தே.கரண்டி
கடலைப்பருப்பு -1 தே.கரண்டி
உளுந்தம் பருப்பு -1 தே.கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
முதலில் முட்டைக்கோஸை நைஸாக நறுக்கிக் ஒரு பாத்திரத்தில் தனியான எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து வெங்காயத்தையும் அதுபோல் நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
பச்சை மிளகாயை இரண்டாக கீறியும் இஞ்சியை தோல் நீக்கி நறுக்காமலும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடானதும், அதில் கடுகு அதில் உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.
பருப்பு பொன்னிறமாகும் வரையில் நன்றாக வதக்கிய பின்னர் அதில் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் இஞ்சி துண்டை சேர்த்து வெங்காயம் பொன்நிறமாகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து பட்டாணியை சேர்த்து வதக்கி. பின்னர் நறுக்கிய முட்டைக்கோஸை சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கிவிட வேண்டும்.
பின்னர் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து முட்டைக்கோஸ் நன்றாக வேகும் வரையில் கொதிக்கவிட வேண்டும்.
முட்டைக்கோஸ் நன்கு வெந்து தண்ணீர் வற்றியதும் அதிலிருந்து இஞ்சி துண்டை வெளியே எடுத்துவிட்டு துருவிய தேங்காயை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு இறக்கினால் அவ்வளவு தான் அருமையான சுவையில் முட்டைக்கோஸ் பொரியல் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |