இட்லி, தோசை மாவில் இதை மட்டும் சேர்த்தால் போதும்.. ஊட்டச்சத்து அதிகரிக்கும்
இட்லி தோசை என்பது காலையில் உண்பதற்கு மிகவும் பொருத்தமான உணவாகும். சக்கரை நோயாளிகள் இட்லி சாப்பிடுவது மிகவும் சிறந்தது.
நாம் இட்லி தோசை மாவு செய்த பின் அதை குறைந்தது ஒரு எட்டு மணி நேரம் வரை ஊற வைத்து விட்டு தான் உணவை செய்ய ஆரம்பிப்போம்.
இந்த இட்லி தோசை மாவில் தானியவகை சேர்ப்பதால் என்ன பயன் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
இட்லிதோசை மாவு
அரிசியும் உளுந்தும் சேர்த்து அரைக்கும் போது கொஞ்சம் பாசிப்பயறு சேர்த்து அரைக்க வேண்டும்.
நீங்கள் இட்லி சாப்பிடும் போது அதை வெறும் மாவாக மட்டும் சாப்பிடாமல் அதில் பல வகையான சத்தையும் தரக்கூடிய தானிய வகையையும் சேர்த்து அரைத்து இட்லி தோசை செய்யலாம்.
இதனால் இட்லி தோசை ஒரு பிரச்சனையும் இல்லாமல் மிகவும் சுவையாக இருக்கும், பாசிப்பயறு சேர்ப்பதால் உடலுக்கு பல சத்துக்கள் கிடைக்கும்.
மாவை புளிக்க வைக்க வெந்தயம் சேர்த்து அரைப்பார்கள், ஆனால் அப்படி செய்யாமல் கறுப்பு உளுந்து சேர்த்து அரைத்தால் அது உடலுக்கு மிகவும் நன்மை தரும்.
இதனால் ரத்த செல்களுக்கு ஆக்ஸினேற்றம் கிடைக்கிறது. எனவே தோசை இட்லி மாவில் தானியவகை சேர்த்து அரைத்தால் அது உடலுக்கு மிகவும் நன்மை தரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |