காலை உணவாக கோதுமை பிரட்.., இதில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?
பிரவுன் பிரட் என்பது பொதுவாக முழு கோதுமை மாவுடன் தயாரிக்கப்படும் ஒருவகை ரொட்டி ஆகும்.
முழு கோதுமை மாவில் தயாரிக்கப்படும் இந்த பிரவுன் பிரட் அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து உள்ளது.
காலை உணவாக இந்த முழு கோதுமை மாவு பிரட்டை சாப்பிட்டு வர பல நன்மைகள் கிடைக்கின்றன.
கிடைக்கும் நன்மைகள்
பிரவுன் பிரட்டில் உள்ள நார்ச்சத்து, வேகமாக செரிமானம் ஆகும் தன்மை உள்ளது. இதனால் மலச்சிக்கலைத் தடுக்க பெரிதும் உதவுகிறது.
பிரவுன் ரொட்டியில் உள்ள நார்ச்சத்து நிறைவான உணர்வை ஊக்குவிக்கிறது. எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு, ஃபைபர் குளுக்கோஸின் உறிஞ்சுதலை மெதுவாக்குவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
இதில் உள்ள கார்போஹைட்ரேட் உடல் செயல்பாடுகளை, குறிப்பாக மூளையின் செயல்பாட்டை ஆதரிக்க உதவுகின்றது.
இந்த பிரட்டில் காணப்படும் இரும்பு இரத்தத்தில் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்வதற்கும் ஹீமோகுளோபின் உருவாவதற்கு இது உதவுகிறது.
எப்படி சாப்பிடலாம்?
இந்த பிரட்டில் வெண்ணெய் அல்லது ஜாம் சேர்த்து சாப்பிடலாம்.
முட்டை, கோழி அல்லது பருப்பு வகைகள் போன்றவற்றுடன் எடுத்துக் கொள்ளலாம்.
வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் சேர்க்கப்படும் காய்கறிகள் வைத்து உண்ணலாம்.
வெண்ணெய்ப் பழமான அவகேடோ உடன் உள்ள சேர்த்து சாப்பிடலாம்.
புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளை கொண்ட பீனட் பட்டர் கலந்து சாப்பிடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |