இதய நோய் காரணமாக ஏற்படும் வீக்கத்தை குறைக்கும் கொய்யா இலை- எத்தனை சாப்பிடணும்?
சமீப காலமாக கொய்யா இலைகள் சாப்பிடுவதால் ஏகப்பட்ட ஆரோக்கிய பலன்கள் கிடைப்பதாக செய்தி வெளியாகி வருகின்றது.
அதாவது மற்ற இலைகளிலும் பார்க்க, கொய்யா இலையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் அவசியமான ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன.
இது மனிதர்களுக்கு தேவையான ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் கொடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அந்த வரிசையில் நமது அன்றாட உணவில் கொய்யா இலைகளை சேர்ப்பதன் உடலில் இருக்கும் அழற்சி பிரச்சினை சரியாகும்.
இது போன்ற எண்ணற்ற பலன்களை தன்னுள் வைத்திருக்கும் கொய்யா இலைகளை எவ்வளவு சாப்பிடலாம்? என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
கொய்யா இலையில் இருக்கும் ஆரோக்கிய பலன்கள்
1. ஒவ்வொரு நாளும் கொய்யா இலைகள் சாப்பிடுவதால் செரிமான கோளாறுகள் குணமாகும். ஏனெனின் கொய்யா இலைகளில் அதிகப்படியான நார்ச்சத்துக்கள் உள்ளன. இது செரிமான கோளாறுகளுக்கு குணமளிக்கும் வேலையை செய்கிறது.
2. தற்போது இருக்கும் அவசர உலகில் செரிமான கோளாறுகள் மற்றும் தவறான உணவு பழக்கங்கள் காரணமாக மலச்சிக்கல் பிரச்சினைக்கு ஆளாகிறோம். மலச்சிக்கல் பிரச்சினையுள்ளவர்கள் தினமும் கொய்யா இலை சாப்பிட்டு வந்தால் மலம் வெளியேறுவதில் இருக்கும் சிக்கல்கள் குறையும். அத்துடன் அழற்சி எதிர்ப்பு பண்புகள், வீக்கம் மற்றும் வயிற்று பிடிப்பு போன்ற பிரச்சினைகளும் குணமாகும்.
3. கொய்யா இலைகளில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் ஆற்றல் உள்ளது. அத்துடன் வைட்டமின் சியும் உள்ளது. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கும். அடிக்கடி நோய்களில் சிக்கிக் கொள்வார்கள் கொய்யா இலைகளை தினமும் வாயில் போட்டு மென்று சாப்பிடலாம்.
4. இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்கள் காரணமாக சிலருக்கு உடலில் வீக்கம் இருக்கும். இந்த நிலையில் இருப்பவர்கள் அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்காக கொய்யா இலைகளை சாப்பிடலாம். இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் நோயின் தாக்கமும் குறையும்.
5. கொய்யா இலைகளில் காணப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்திற்கு ஆரோக்கியம் வழங்குகின்றது. இந்த சேர்மங்கள் ஃப்ரீ ரேடிக்கல்கள் மற்றும் புற ஊதா கதிர்வீச்சால் ஏற்படும் சேதத்திலிருந்து எமது சருமத்தை காக்கிறது. கொய்யா இலைகளை முகப்பரு உள்ளவர்கள், தோலில் கறை போன்ற நோயுள்ளவர்கள் பராமரிப்பு தேவைகளுக்காக கொய்யா இலைகளை பயன்படுத்தலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |