நீரிழிவு நோயை விரட்டியடிக்க தினமும் ஒரு துண்டு இஞ்சி போதும்! அட இவ்வளவு அதிசயங்கள் நடக்குமா?
இஞ்சி நிறைய நன்மைகளை தரக்கூடிய மசாலா பொருள் என்பதால் தமிழர்கள் உணவில் பண்டைய காலம் முதலே பயன்படுத்தி வருகின்றனர்.
இன்றைய காலத்தில் ஒரு மனிதன் நோயில்லாமல் வாழ்வது கூட அதிசயம் என்பது போல மாறிவிட்டது. அந்த அதிசயத்தை செய்ய இஞ்சி உதவி புரியும். இதில் இருக்கும் மருத்துவ குணங்கள் குறித்து முழுமையாக பார்க்கலாம்.
நீரிழிவு நோயைத் தடுக்கவும், நீரிழிவு நோயின் ஆபத்துகளை குறைக்கவும் இஞ்சி உதவுகிறது.
இஞ்சியை தேநீரில் போட்டு குடித்து வர நெஞ்செரிச்சல் நீங்கும். குடல் அழற்சியைத் தடுக்க இஞ்சி உதவுகிறது.
இஞ்சி இயற்கையான ஆன்டி பயாடிக் ஆகும், இது வயிற்று வலிக்கு காரணமான தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை விரட்ட உதவுகிறது.
தலைவலியை போக்க ஒவ்வொரு நாளும் இஞ்சியை சேர்த்து வருவது சிறப்பு.
உணவில் இஞ்சியை சேர்க்கும் போது உங்க மெட்டா பாலிசி செயல்கள் அதிகரித்து உடல் எடையை குறைக்க முடியும்.
தினசரி உழைப்பால் ஏற்படும் தசை வலி மற்றும் தசை புண் போன்றவற்றை போக்க இஞ்சியின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உதவுகின்றன.
இஞ்சி மூட்டு வலியைப் போக்கும் நிவாரணியாகவும் செயல்படும், இஞ்சி தசைப் பிடிப்பைக் குறைக்க உதவும்.
மாதவிடாய் காலத்தில் உங்களை நன்றாக உணரச் செய்யவும் உதவும். செரிமான செயல்முறையின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் உமிழ்நீரைத் தூண்டுவதற்கும் இஞ்சி உதவுகிறது.
நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது காலையில் ஏற்படும் குமட்டல், வாந்தியை போக்க இஞ்சி உதவுகிறது.