சுவை நிறைந்த சப்பாத்தி கள்ளி பழம்.., என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
சப்பாத்தி கள்ளி பழம் இந்தியாவின் கிவி என்றும் அழைக்கப்படுகிறது. சிவப்பு நிறத்தில், இனிப்பு சுவையுடன் இருக்கும் இந்தப் பழம் வறண்ட பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது.
ஆடு, மாடு மேய்க்கும் விவசாயிகள் மற்றும் பழங்குடியினர் இதை புத்துணர்ச்சி தரும் உணவாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தப் பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகமாக இருப்பதால், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
சப்பாத்தி கள்ளி பழத்தின் மேற்பகுதியில் சிறிய முட்கள் அதிகமாக இருக்கும் என்பதால் தோலை நீக்கிவிட்டே சாப்பிட வேண்டும்.

இந்தப் பழத்தில் கலோரிகள் குறைவாக இருப்பதால், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்றதாக கருதப்படுகிறது.
மேலும், கொலஸ்ட்ராலை குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உதவக்கூடும். நார்ச்சத்து இருப்பதால் செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலை குறைக்க, குடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க உதவுகிறது.
சில பாரம்பரிய நம்பிக்கைகளின்படி, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலியை குறைக்க இந்தப் பழம் உதவும் என்று கூறப்படுகிறது.

அதேபோல், பிசிஓடி (PCOD) மற்றும் கருப்பை நீர்க்கட்டிகளை குறைக்க உதவும், கருமுட்டை வளர்ச்சியை மேம்படுத்தும், குழந்தைப்பேறுக்கு உதவும் என்றும் சொல்லப்படுகிறது.
மேலும், இந்தப் பழம் ஆண்களின் விந்தணு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று சிலர் கூறுகின்றனர்.
சப்பாத்தி கள்ளி பழம் சத்துக்கள் நிறைந்த பழமாக இருந்தாலும், நோய்களுக்கு சிகிச்சையாக பயன்படுத்தும் முன் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது முக்கியம்.