எந்த நோயும் கிட்டயே வரக்கூடாதா? அப்போ தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் போதும்
மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த நெல்லிக்காய் ஆனது பல்வேறு நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
அளப்பரிய ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள நெல்லிக்காயை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்ககூடிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மருத்துவ குணங்கள்
நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் சளி மற்றும் இருமலை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களிலிருந்தும் உடலை பாதுகாக்கின்றது.
ஆரோக்கியமான மற்றும் அழகான சருமத்தை ஊக்குவிக்கும் நெல்லிக்காய் முடி வளர்ச்சியை பலப்படுத்துகிறது மற்றும் கண் பார்வை திறனையும் மேம்படுத்துகிறது.
ரத்தத்தை சுத்தப்படுத்துவதால் முகப்பரு, சருமம் வறண்டு போகுதல், சொறி சிரங்கு, சருமம் சிவந்து போகுதல் போன்ற சரும வியாதிகள் வராமல் தடுக்கும்.
நெல்லிக்காய் தலைமுடியைக் கருமையாக செழிப்பாக வளரவைக்கும் என்பதால்தான் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய் வகைகளிலும் தலைச் சாயத் தயாரிப்பிலும் இது முக்கிய இடம் வகிக்கின்றது.
அசிடிட்டி, வயிற்று உப்புச பிரச்சனை என இரைப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரிசெய்கிறது, சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. நெல்லிக்காயில் கால்சியம் சத்து நிறைய இருப்பதால், எலும்புகள் உறுதியாகும்.
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க பெரிதும் துணைப்புரிகின்றது. தினமும் ஒரு நெல்லிக்காய் உண்டுவந்தால், நீரிழிவு நோயை இலகுவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம்.
அதிக உடல் பருமனால் கஷ்டப்படுகிறவர்கள் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாறுடன் இஞ்சிச் சாறு அருந்திவந்தால் தேவையற்ற எடை குறைத்து அழகிய தோற்றத்தை பெற முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |