முருங்கை கீரை இத்தனை நோய்களுக்கு மருந்தாகிறதா? தினமும் எடுத்துக்கோங்க
வீதிகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது.
முருங்கை மரத்தின் வேரிலிருந்து இலை வரைக்கும் அத்தனைமருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது. முருங்கை இலைகளின் மருத்துவப் பலன்களை அறிந்து, பல நிறுவனங்களும் முருங்கை இலையை காய வைத்து, பொடித்து, முருங்கை இலை பொடி என பாக்கெட் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.
அந்தவகையில், இந்த முருங்கை இலையில் இருக்கும் எண்ணற்ற நன்மைகள் பற்றி இந்தப் பதிவில் தெரிந்துக் கொள்வோம்.
முருங்கை இலையின் நன்மைகள்
முருங்கை இலைகளில் ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை சருமத்தின் ஆரோக்கியம் மற்றும் தோற்றத்தை மேம்படுத்த உதவுகின்றன.
முருங்கை இலைகள் பொடுகுத் தொல்லையைக் குறைக்கவும், மயிர்க்கால்களை வலுப்படுத்தவும், முருங்கை இலை எண்ணெய் உதவுகிறது.
முருங்கை இலைகளில் இருக்கும் பீட்டா கரோட்டின் கண் பிரச்சனைகளை தீர்த்து நல்ல கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
காசநோய், கொழுப்பு கல்லீரல் போன்ற கல்லீரல் நோய்கள் உள்ளவர்களுக்கும் முருங்கை இலைகள் நன்மை பயக்கும்.
முருங்கை இலைகளில் அதிக செறிவுகளில் வைட்டமின் சி மற்றும் ஈ இருப்பது மூளை மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தும்.
முருங்கை இலைகள் தாதுக்கள் உருவாக்கி சிறுநீரகத்தில் கற்கள் உண்டாக்குவதைத் தடுக்கவும் உதவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |