வெறும் டீ-க்கு பதிலாக இஞ்சி டீ குடித்தால் என்ன நடக்கும்?
பொதுவாக நமது உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம் நம்முடைய தவறான உணவு பழக்கங்கள் தான்.
அதுமட்டுமன்றி காலநிலை மாற்றம் காரணமாக தொற்று, அஜீரணம் , சளி , இருமல் , தொண்டை வலி ஆகிய பிரச்சினைகளும் வரக்கூடும்.
இது போன்ற நேரங்களில் வெளியில் உள்ள மருந்து வில்லைகளை அருந்தாமல் வீட்டிலுள்ள சில பொருட்களை சேர்த்து டீ போட்டு குடித்தால் மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளிலிருந்து இலகுவாக விடுபெறலாம்.
அந்த வகையில் காலையில் வெறும் டீ குடிக்காமல் இஞ்சி சேர்த்து டீ குடிப்பதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன என்பது தொடர்பில் தெரிந்து கொள்வோம்.
இஞ்சி டீ
Image - onlymyhealth
1. இஞ்சியில் இருக்கும் ஊட்டசத்துக்கள் உடம்பிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோயை தாங்குவதற்கு உதவிச் செய்கின்றது.
2. கொரோனா போன்ற தொற்றுக்கள் நுரையீரலை தாக்கும் பொழுது இஞ்சி டீ குடிப்பதால் நுரையீரல் பாதுகாக்கப்படுகின்றது.
3. குமட்டல் மற்றும் வாந்தி வருவது போன்று இருந்தால் இஞ்சி கலந்த டீ அல்லது கஞ்சி இது போன்ற தீரவ உணவுகளை எடுத்து கொள்வது சிறந்தது.
4. இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் தசை மற்றும் மூட்டு பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகின்றது.
5. காலையில் அருந்தும் இஞ்சி தேநீரில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் அதிகம் உள்ளன. இது தேகத்தில் இருக்கும் சோம்பலை விரட்டி இரத்தயோட்டத்தை அதிகரிக்கின்றது.