வெறும் வயிற்றில் கொத்தமல்லி டீ குடித்தால் எடை குறையுமா? நிபுணரின் ஆலோசனை
பொதுவாக தற்போது இருக்கும் மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கத்தால் உடல் எடையை சீராக வைத்து கொள்வது பெரும் சவாலாக உள்ளது.
அதிலும் குறிப்பாக இளம் வயதில் இருப்பவர்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்வதற்காக பல்வேறுப்பட்ட டயட்களை செய்து வருகிறார்கள்.
அப்படி இருப்பவர்கள் காலையில் எழுந்தவுடன் டீ-க்கு பதிலாக கொத்தமல்லி கலந்த தேநீர் குடிப்பது எடையை கட்டுக்குள் வைக்கும் என மருந்து நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
சமையலறையில் உள்ள கொத்தமல்லி ஒரு மசாலா பொருளாக இருந்தாலும் மனிதர்களின் உடலுக்கு ஏகப்பட்ட ஆரோக்கிய பலன்களை தருகிறது. கொத்தமல்லி உணவுக்கு சுவையை சேர்த்து ஆரோக்கிய பலன்களையும் தருகிறது என பலரும் கட்டுரைகளில் படித்திருப்போம்.
ஆனால் சிலருக்கு கொத்தமல்லியை எப்படி எடுத்து கொண்டால் அதிகமாக பலனை பெறுவது என்பது குறித்து போதியளவு விளக்கம் இருக்காது.
அப்படியானவர்கள் கொத்தமல்லி டீ குடித்தால் என்னென்ன பலனை பெற்றுக் கொள்ளலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
கொத்தமல்லி விதைகளில் இருக்கும் மருத்துவ பலன்கள்
1. கொத்தமல்லி டீ குடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் செரிமானம், தோல் மற்றும் பிற உடல் நல பிரச்சனைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஏனெனின் இவற்றை சரிச் செய்து அவர்களின் ஆரோக்கியத்தை கொத்தமல்லி மேம்படுத்தும்.
2. கொத்தமல்லி விதைகளில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது செரிமான அமைப்பை சரிச் செய்து வாயு, வயிற்றுப்புசம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை வரவிடாமல் பார்த்து கொள்கிறது. தினமும் வெறும் வயிற்றில் குடிக்கலாம் என மருத்துவர் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
3. கொத்தமல்லி டீ குடிப்பதால் வளர்சிதை மாற்றம் சீராக இருக்கும். அத்துடன் கெட்ட கொழுப்பு குறையும் வாய்ப்பு உள்ளது. இதன் விளைவாக உங்களின் எடை குறைந்து சிலிம்மாக நீங்கள் மாறி விடுவீர்கள்.
4. கொத்தமல்லி விதைகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது உங்களின் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வேலையை செய்கிறது. தினமும் கொத்தமல்லி கலந்த டீ குடிப்பவர்களின் சருமம் பளபளப்பாக இருக்கும்.
5. ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொத்தமல்லி விதைகளுக்கு உள்ளன. இது சர்க்கரை நோயாளிக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது.
6. உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் கொத்தமல்லி விதைகளுக்கு உள்ளன. இதனால் அடிக்கடி நோய்களிகள் சிக்கிக் கொள்பவர்கள் டீயில் கொத்தமல்லி விதைகள் கலந்து குடிக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |