காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ்.., கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
நெல்லிக்காயில் வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.
இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும், சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
அந்தவகையில், தினமும் காலை வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
அதன்படி, தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். மேலும், மலச்சிக்கல் பிரச்சனையை குறைக்க உதவும்.

நெல்லிக்காய் ஜூஸில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
மேலும், இந்த ஜூஸ் இயற்கையான டிடாக்ஸ் பானமாக செயல்பட்டு உடலை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
அதேபோல், இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் செரிமானத்தை மேம்படுத்தி, குடல் இயக்கத்தை சீராக்கி மலச்சிக்கலை குறைக்க உதவுகின்றன.

குறிப்பாக உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு நெல்லிக்காய் ஜூஸ் சிறந்தது. இதில் உள்ள வைட்டமின் சி வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது.
நெல்லிக்காய் ஜூஸ் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுவதால் நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் நல்லது.
மேலும், கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், சருமத்திற்கும் நல்ல பொலிவை அதிகரிக்கவும், சருமம் இளமையாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும்.