பேரிச்சம் பழத்தை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால் என்ன நடக்கும்? தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக பெண்கள் தங்களின் மாதவிடாய் முறையாக வரவிட்டால் அதிகமான பேரிச்சம் பழம் எடுத்து கொள்வார்கள்.
ஏனெனின் பேரிச்சம் பழத்தில் இரத்தயோட்டை அதிகப்படுத்தும் ஆற்றல் இருக்கின்றன.
அத்துடன் பேரிச்சம் பழம் தினமும் காலையில் ஊற வைத்து சாப்பிட்டால் அன்றைய நாளை சிறப்பாக கொண்டு செல்ல புது விதமான சக்தி கிடைக்கும்.
அந்த வகையில் தினமும் காலையில் வெறும் வயிற்றில் பேரிச்சம் பழத்தை ஊற வைத்து சாப்பிடுவதால் என்ன நன்மைகள் என தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
Image - india
1. உலர் பேரிச்சம் பழத்தில் அதிகமான நார்ச்சத்துக்கள் இருக்கின்றன. இது மலச்சிக்கல் மற்றும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளை இல்லாமலாக்குகின்றது. அத்துடன் வெறும் வயிற்றில் சாப்பிடும் போது உடலுக்கு தேவையான சக்தியையும் தருகின்றது.
2. வாய்வுத் தொல்லை, வயிற்று உப்புசம் ஆகிய பிரச்சினைகளால் அதிகமான குழந்தைகள் அவதிப்படுவார்கள். இதற்கு காலையில் பேரிச்சம் பழம் இரண்டு கொடுத்தால் போதும்.
3. ஊற வைத்த பேரிச்சம் பழத்தை சாப்பிடுவதால் நினைவாற்றல் அதிகரிப்பதுடன் புத்திக்கூர்மையாக்கப்படும்.
4. எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் மிகவும் அவசியம். இந்த கால்சியம் உலர் பேரிச்சம் பழத்தில் அதிகம் உள்ளன.
5. உலர் பேரிச்சம் பழத்தில் கொழுப்புக்கள் குறைவு, சோடியம் குறைவு, பொட்டாசியம் அதிகம் மற்றும் கொலஸ்ட்ரால் எதுவும் இல்லை. ஆகவே எந்தவிதமான தயக்கமும் இன்றி இதனை யாரு வேண்டும் என்றாலும் சாப்பிடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். |