சீக்கிரமா எடை குறைக்கனுமா? அப்போ வாழைத் தண்டு தான் பெஸ்ட் சாய்ஸ்
பொதுவாகவே வாழைமரத்தின் அனைத்து பாகங்களும் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தரக்கூடியது.
உடல் எடையை குறைக்க விரும்புவோர் எளிமையாக உடல் எடையை கணிசமாக குறைக்க வாழைத்தண்டு எவ்வாறு பயன் கொடுக்கின்றது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வாழைத்தண்டு, ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நன்மைகள் நிறைந்த காய்களுள் ஒன்று.
வாழைத்தண்டில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இதை சாப்பிடுவதால் வயிற்றிலுள்ள புண் நீங்கும்.
புண் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கும் அமிலத்தையும் இது அழிக்க உதவும். வாழைத்தண்டில், வாழைப்பழம் போலவே பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி6 சத்துக்கள் நிறைந்துள்ளன.
இது, உடலில் ஹீமோகுளோபின் மற்றும் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். வாழைத்தண்டை, கூட்டாகவோ பொரியலாகவோ சாப்பிடலாம்.
அல்லது பச்சையாக வேக வைத்து சாலட் ஆகவும் சாப்பிடலாம். அது மட்டுமல்ல, வாழைத்தண்டினை சாறாக்கி ஜூஸாக குடிக்கலாம்.
உடல் எடையை குறைக்க விரும்புவோர், உடலில் உள்ள கொழுப்பை குறைக்க விரும்புவோர் வாழைத்தண்டை ஜூஸ் ஆக்கி குடிக்கலாம். தினசரி குடித்துவர கண்கூடான பலனை கொடுக்கும்.
வாழைத்தண்டு ஜூஸ் குடித்தால் வயிறு நிறைவாக இருக்கும். அதிகம் பசி எடுப்பதை தடுக்கும்.
மேலும், வாழைத்தண்டில் காணப்படும் சிறப்பு வகை நார்ச்சத்து உடலில் உள்ள கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைப்பதில் சிறந்த தீர்வு கொடுக்கும்.
வாழைத்தண்டு சாற்றுக்கு சிறுநீரை பெருக்கும் தன்மை உண்டு. எனவே, இதை நீர்ச் சுருக்கு, எரிச்சல் போன்றவை தீர அருந்தி வரலாம்.
சிறுநீரக கற்கள் விரைவில் கரையவும், குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது வாழைத்தண்டு ஜூஸ் குடிக்க வேண்டும்.
வாழைத்தண்டை பொரியல் செய்து சாப்பிட்டால் குடலில் சிக்கியுள்ள முடி, நஞ்சு போன்றவை வெளியேறிவிடும்.
நெஞ்செரிச்சல் அதிகமாய் இருந்தால் உடனடி தீர்வு காண, காலையில் வெறும் வயிற்றில் வாழைத்தண்டி ஜூஸ் குடிப்பது நல்லது. நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில், வைக்க தினமும் வாழைத்தண்டு ஜூஸ் குடிப்பது நல்லது.
வாழைத்தண்டை உலர்த்தி பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டு வர காமாலை நோய் குணமாகும். மேலும், கல்லீரல் வலுவடையும். சிறுநீரக பாதையில் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால், அதனை குணப்படுத்த வாழைத்தண்டு உதவியாக இருக்கும்.
மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு நோய்க்கும் இது சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |