இரவில் வாழைப்பழம் சாப்பிட்டால் உடலுக்கு தீங்கு விளைவிக்குமா?
பழங்கள் என்றால் அது உடலுக்கு மிகவும் நல்லது. ஒவ்வொரு பழத்திலும் ஒவ்வொரு சத்துக்கள் உள்ளன.
ஆனால் ஒரு சில பழங்களை சில நேரங்களில் தான் உண்ண வேண்டும். அந்த வகையில் வாழைப்பழத்தை எப்போது உண்ண வேண்டும் எப்போது உண்ண கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இந்த பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் A, வைட்டமின் B6, வைட்டமின் C, நார்ச்சத்துக்கள், மக்னீசியம்,போன்ற சத்துக்கள் இருக்கின்றன.

வாழைப்பழம்
வாழைப்பழத்தில் கலோரிகள் அதிகமாக உள்ளன. வாழைப்பழம் சாப்பிடுவதால் உடல் எடையின் அளவு அதிகமாகும். மனிதர்களுக்கு வரக்கூடிய ஒற்றை தலைவலி தைரமின் என்ற சுரப்பி மூலமாக வருகிறது.

இதனால் வாழைப்பழம் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு இந்த சுரப்பி அதிகமாக சுரக்கும். வாழைப்பழத்தில் உள்ள டைரோசின் அமினோ அமிலம் ஒற்றை தலைவலியை தூண்டக்கூடியது.

கண் சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் இந்த பழம் சாப்பிடுவதை குறைத்து கொள்ள வேண்டும். வாழைப்பழத்தில் அதிகளவிலான நார்ச்சத்து இருப்பதால் அதை இரவில் உண்ண கூடாது.

இவ்வாறு உண்பதால் உடலில் வாயுப்பிரச்சனை பலமாக காணப்படும். வாழைப்பழத்தில் உள்ள ட்ரிப்டோபான் மற்றும் அமினோ ஆசிட்கள் தூக்கமின்மை பிரச்சனையை உண்டாக்கும். இதனால் தான் இரவில் வாழைப்பழத்தை உண்ணக்கூடாது என்பார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        