சர்க்கரை நோயாளிகளின் உயிர் காக்கும் ஆப்ரிகாட் பழம்.. தினமும் சாப்பிடலாமா?
பொதுவாக மனிதர்களின் ஆரோக்கியத்தில் பழங்கள் முக்கிய இடத்தை பிடிக்கிறது.
அந்த வரிசை ஏகப்பட்ட ஆரோக்கிய பலன்களை கொண்டிருக்கும் ஆப்ரிகாட் (அ) சர்க்கரை பாதாமி எனப்படுவது கொத்துப்பேரி இனத்தை சேர்ந்த ஒரு பழமாக பார்க்கப்படுகின்றது.
இந்த பழத்தை தினமும் எடுத்து கொள்ளும் பொழுது உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன.
அந்த வகையில் தினமும் 2 ஆப்ரிகாட் பழம் சாப்பிட்டு வந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கின்றன என்பது பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
ஆப்ரிகாட் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்
1. ஆன்டி - ஆக்ஸிடன்கள் நிறைந்த ஆப்ரிகாட் பழத்தில் ஃபிளவனாய்டு மற்றும் கனிமங்கள் உள்ளன. இவை, இரத்த குளுக்கோஸ் அளவை கட்டுக்க உதவியாக இருக்கிறது.
2. ஆப்ரிகாட் பழத்தில் பீட்டா கரோட்டின், லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் ஆகிய சத்துக்கள் உள்ளன. இவை ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராட உதவியாக இருக்கிறது. அத்துடன் குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய் உள்ளிட்ட அபாயத்தையும் குறைக்கிறது.
3. வைட்டமின் ஏ-வின் சிறந்த மூலமாக ஆப்ரிகாட் பழம் உள்ளது. இந்த வைட்டமின் கண்கள் மற்றும் கருவிழிகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
4. மூளை ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் சி ஆப்ரிகாட் பழத்தில் அதிகம் காணப்படுகிறது என்றாலும் பீட்டா கரோட்டின், ஆன்டி - ஆக்ஸிடன்கள் அல்சைமர் உள்ளிட்ட மூளை பிரச்சனைகளையும் கட்டுக்குள் வைக்கிறது.
5. ஆப்ரிகாட் பழத்தை சாப்பிடும் ஒருவருக்கு மலச்சிக்கல் பிரச்சினை வருவது குறைவாக இருக்கும். ஏனெனின் ஆப்ரிகாட் பழத்தில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமானத்தை சீராக பேணுகிறது.
6. ஆப்ரிகாட் பழத்தில் கலோரிகள், கொழுப்புகள் குறைவாக உள்ளது. இந்த பழத்தை டயட்டில் இருப்பவர்கள் அவர்களின் உணவில் எடுத்துக் கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |