வாரத்திற்கொரு முறை ஆட்டுக் குடல் சாப்பிட்டால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் தெரியுமா?
பொதுவாகவே விடுமுறைகளில் வீட்டில் இருக்கும் ஆண்கள் கடைகளுக்கு சென்று ஆறுதலாக வீட்டில் இருந்து சாப்பிட வேண்டும் என்பதற்காக மீன், இறால், நண்டு, இறைச்சி என்பனவற்றை வாங்கி வந்து திருப்தியாக சமைத்து சாப்பிடுவார்கள்.
அவ்வாறு விடுமுறைகளை ஆசைக்காக மட்டுமல்லாது ஆரோக்கியமாகவும் கழிக்க வேண்டும். அந்தவகையில் வாரம் ஒருமுறைக்கு ஆட்டின் குடலை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.
ஆட்டுக்குடல்
ஆட்டிக்கறியில் சத்துக்களும் சுவையும் அதிகமாக இருக்கிறது. மேலும் ஆட்டின் பாகங்களும் அதிக ஆரோக்கியம் கொண்டது அதுபோல ஆட்டின் குடலை வறுவலாகவும் அல்லது குழம்பாகவும் சமைத்து சாப்பிட்டு வந்தால் ஆரோக்கிய நன்மைகள் உண்டு.
ஆட்டுக்குடலில் இருக்கும் இரும்புச்சத்து, மக்னீசியம், செலினியம், ஜிங்க் போன்ற கனிமச்சத்துக்களும், கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே போன்றவை அதிகமாக உள்ளன.
ஆட்டுக்குடலின் நன்மைகள்
- குடல் இறைச்சி புரதம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி12 உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களின் நல்ல மூலமாகும். இந்த ஊட்டச்சத்துக்கள் நல்ல ஆரோக்கியத்தை பராமரிப்பதிலும் பல்வேறு உடல் செயல்பாடுகளை ஆதரிப்பதிலும் முக்கிய பங்கை கொண்டிருக்கிறது.
- மியூசின் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் குடல் தொடர்பான கோளாறுகளைத் தடுக்கவும் உதவுகிறது.
- ஆட்டுக்குடலை சாப்பிட்டால் அதிலிருக்கும் துத்த நாகத்தின் மூலம் நோயெதிர்ப்பு மண்டலத்தை பராமரிக்கிறது.
- குடல் இறைச்சி கோலினின் நல்ல மூலமாகும், இது மூளையின் செயல்பாடு மற்றும் அறிவாற்றல் செயல்திறனை பராமரிக்க ஒரு முக்கிய ஊட்டச்சத்து ஆகும்.
- குடல் இறைச்சிகளில் கிரியேட்டின் உள்ளது, இது தசை செயல்திறனை மேம்படுத்துவதற்கும் சகிப்புத்தன்மையை அதிகரிப்பதற்கும் அறியப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |