கற்பூரவள்ளி இலையில் இவ்வளவு நன்மைகளா? இது தெரியாமல் போச்சே!
கற்பூரள்ளி இலையில் வைட்டமின் சி மற்றும் ஏ போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மேலும் இதில் உடம்பிற்கு தேவையான சத்துக்களையும் அளிக்கின்றது.
கற்பூரவள்ளி இலையானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது.
எவ்வாறான பிரச்சனைகளுக்கு இந்த கற்பூரவள்ளி இலை உதவி செய்கிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கற்பூரவள்ளியின் பயன்கள்
1. சளி இருமல் வறட்டு இருமல் மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகளுக்கு இந்த இலையின் சாறை எடுத்து வெறு வயிற்றில் குடித்தால் அதில் இருந்து சிறந்த நிவாரணம் கிடைக்கும். இந்த இலைகளின் சாறை சக்கரையுடன் சேர்த்து நெற்றியில் போட்டால் தலைவலி முற்றாக இல்லாமல் போகும்.
2. குழந்தைகளுக்கு விடாத சளி இருமல் இருந்தால் இவர்களுக்க கற்பூரவள்ளி இலை ஒன்றை எடுத்து நெருப்பில் வாட்டி பின்னர் அதன் சாற்றை சங்கில் ஊற்றி கொடுத்தால் சளி இருமல் இல்லாமல் போகும். பெரியவர்களாக இருந்தால் மூன்று இலை எடுத்துக் கொள்ளலாம்.
3. நமது ரத்தத்தில் அதிகமாக இருக்கும் உப்புக்களை சுத்திகரித்து சிறுநீருடன் வெளியேற்ற கற்பூரவள்ளி இலை துணையாக இருக்கும். இதனால் சிறுநீரக நோய் வராமல் இருக்கும்.
4. கண் அழற்சி முகப்பருக்கள் நரம்புகள் சம்பத்தப்பட்ட பிரச்சனை மற்றும் நரைமுடி பிரச்சனை பொன்ற எல்லா விஷயங்களுக்கும் கற்பூரவள்ளி இலையை நீங்கள் மருந்தில் எடுத்து கொள்ளலாம். அவ்வாறு எடுத்துக் கொண்டால் அது எமது உடலுக்கு பல நன்மைகளை தரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |