குப்பை மேடுகளில் வளரும் சூப்பரான மூலிகை! எப்படி பயன்படுத்த வேண்டும்?
பொதுவாகவே நம்மை சுற்றி இருக்கும் பல மருத்துவ பொருட்கள் குறித்தும் நாம் பெரிதாக கண்டுக்கொள்வதில்லை. அப்படிப்பட்ட ஒரு பொருள் தான் குப்பைமேனி.
வீதி ஓரங்களிலும் குப்பை மேடுகளிலும் அதிகளவில் வளர்ந்து காணப்படும் இந்த குப்பைமேனியில் அளப்பரிய ஆரோக்கிய நன்மைகள் நிறைந்து காணப்படுகின்றது.
ஒவ்வொரு பகுதியிலும் எண்ணிலடங்கா மருத்துவ குணம் கொண்ட குப்பைமேனி உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வாறான பலன்களை கொடுக்கும் என்பது குறித்தும் எந்த நோய்களுக்கு பயன்படுத்தலாம் என்பது குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.
குப்பைமேனி இலையை...
ஒரு தே.கரண்டி குப்பைமேனி இலையின் சாற்றை வெண்ணீரில் கலந்து குடித்தால் மலச்சிக்கல் குணமடைந்து, வயிற்றில் உள்ள புழுக்களும் வெளியேறி பசியின்மை மற்றும் செரிமான பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வை கொடுக்கின்றது.
குப்பைமேனி இலைகளை காயவைத்து பொடியாக்கி விளக்கெண்ணையில் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப் புழுக்கள் பிரச்சினை வரவே வராது.
குப்பைமேனி இலைகளின் சாற்றை தினசரி ஒரு தே. கரண்டி குடித்து வந்தால் சளி பிரச்சினை மற்றும் வறட்டு இருமல் தொண்டை வலி போன்றவற்றிற்கு சிறந்த தீர்வாக அமையும்.
விஷப்பூச்சிகள், பூரான், தேள் போன்றவை கடித்தாலும் குப்பைமேனி இலையுடன் மஞ்சளை சேர்த்து அரைத்து கடித்த இடத்தில் தடவினால் விஷதன்மை குறைந்து வலிநிவாரணியாகவும் இருக்கும்.
குப்பைமேனி இலைச்சாறை தினசரி குடிப்பவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், சைனஸ் பிரச்சினைக்கும் தீர்வு ககிடைக்கின்றது.
குப்பைமேனி சாறு ரத்த அழுத்தத்ததை சீர்வதுடன் பல் சொத்தை மற்றும் பல் வலிக்கும் குப்பைமேனி இலைகளை சிறந்த பலனை கொடுக்கின்றது.
நோய் காரணமாக அதிக நாட்கள் படுக்கையில் இருக்கும் நோயாளிகளுக்கு ஏற்படும் படுக்கை புண்ணுக்கு குப்பைமேனி இலையில் விளக்கெண்ணெய் சேர்த்து அரைத்து புண்ணில் தடவினால் இலகுவில் குணமடையும்.
அரிப்பு, படை போன்ற தோல் பிரச்சினையுடையவர்களுக்கு குப்பைமேனி இலையுடன் கல் உப்பு மற்றும் மஞ்சள் ஆகியவற்றை அரைத்துத் தடவினால் இலகுவில் குணமடைந்துவிடும்.
மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் குப்பைமேனி இலையை சாற்றுடன் உப்பு சேர்த்து குடித்து வந்தால் தீர்வு கிடைக்கும்.
தலைவலி இருக்கும் போது குப்பைமேனி சாற்றை அந்த இடத்தில் வைத்து மசாஜ் செய்தால் தலைவலி குணமாகும்.
குப்பைமேனி இலையை இலேசாக வதக்கி தலையில் கட்டுப்போடுவதன் மூலம் தலைவலி நீங்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |