குளிக்கும் போது பாட்டு பாடும் பழக்கம் இருக்கா? இந்த நன்மைகளை எல்லாம் அனுபவிக்கலாம்
பொதுவாகவே பாட்டுப் பாடுவது என்றால் எல்லோருக்கும் விருப்பமானதொன்றுதான். அதிலும் சினிமாக்களில் வருவது போல பாடல் பாடிக் கொண்டு குளிப்பது இன்னும் விருப்பம் தான்.
இவ்வாறு பாடல் பாடிக் கொண்டு குளிக்கும் போது உடலுக்கு என்னென்ன நன்மைகள் தெரியுமா?
பாடிக் கொண்டு குளிப்பதன் நன்மைகள்
பாடிக் கொண்டு குளிக்கும் போது உங்களுக்குள் ஒரு உற்சாகம் கிடைக்கும்.
குளிக்கும் போது பாட்டு பாடுவது அதிக ஆக்ஸிஜனை சுவாசிப்பீர்கள். மேலும், உங்கள் கழுத்து, தொண்டை, தாடை மற்றும் முகத்தின் தசைகளுக்கு பாடுவது ஒரு நல்ல பயிற்சியாகும்.
பாடல் பாடுவது குரல்வளையைத் தூண்டுவதால், அது குறட்டையைக் குறைத்து, தூக்கமின்மையைத் தடுக்கும்.
பாடுவது வலி நிவாரணியாகக் கருதப்படுகிறது, ஏனெனில் இது உங்கள் ஆன்மாவை அமைதிப்படுத்துகிறது மற்றும் துக்கம் மற்றும் மனச்சோர்வைச் சமாளிக்க உதவுகிறது.
குளிக்கும் போது பாடல் பாடுவது இதயத்தில் உள்ள உணர்வுகள் அல்லது உணர்ச்சித் தடைகளை விடுவிக்கும்.
பாடுவது உங்கள் மன குழப்பத்தை குறைக்கிறது மற்றும் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது
குளியலறையில் பாடுவது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |