வெறும் வயிற்றில் வெந்தய நீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
காலையில் வெறும் வயிற்றில் எதை சாப்பிட்டால் உடல் ஆராக்கியத்திற்கு தீங்கு விளைவிக்காமல் உடல் எடையை சரியாக பராமரிப்பது என்ற குழப்பம் பொதுவாகவே நம்மில் பலரிடம் காணப்படுகின்றது. இதற்கான சிறந்த தீர்வு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பொதுவாகவே அனைவரின் சமையலறையில் இருக்கும் பொருள் தான் வெந்தயம்.
வெந்தயம் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்திற்கு எடையை சீராக பராமரிப்பதற்கும் மிகச் சிறந்த தீர்வாக காணப்படுகின்றது.
வெந்தய நீரின் நன்மைகள்
ஒரு ஸ்பூன் வெந்தய விதையில் நார்ச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட், இரும்பு, மாங்கனீசு மற்றும் மெக்னீசியம் உள்ளது.
வெந்தய நீரில் காணப்படும் இந்த சத்துக்கள் செரிமானம், வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துதல், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பராமரிக்கவும், உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கவும் உதவுகிறது.
காலையில் வெறும் வயிற்றில் வெந்தயத் தண்ணீரைக் குடிப்பது மிகவும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களில் ஒன்றாகும்.
காலையில் வெறும் வயிற்றில் வெந்தய நீரை உட்கொள்வது உடல் எடையை குறைக்க உதவும். வெந்தய நீரில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, விரைவான எடையைக் குறைக்க உதவுகிறது.
வெந்தய விதைகள் செரிமானத்தை மேம்படுத்த உதவும் இயற்கையான ஆன்டாக்சிட் ஆக செயல்படுகிறது. நீங்கள் அடிக்கடி மலச்சிக்கல் மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுகிறீர்கள் என்றால், வெந்தய நீரை உட்கொள்வது உங்களுக்கு நன்மை பயக்கும். வெந்தய விதை நீரும் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும்.
வெந்தய விதைகளில் ஃபிளாவனாய்டுகள் உள்ளன, அவை உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கின்றன மற்றும் இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும்.
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு வெந்தய நீர் துணைப்புரிகின்றது.
ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வெந்தய விதைகளில் அதிகமாக காணப்படுகின்றன, இது மாதவிடாய் நேரத்தில் ஏற்படுத்தும் பிடிப்புகள் மற்றும் வலியிலிருந்து நிவாரணம் அளிக்க உதவுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |