தினமும் சிக்கன் சாப்பிட்டால் ஆபத்தா? உண்மையை தெரிஞ்சிக்கோங்க
இன்று பெரும்பாலான அசைவ பிரியர்களின் முதன்மையான உணவு என்றால் அது சிக்கன் தான். பல சுவைகளில் இன்று ஹொட்டல்களில் சமைத்து தரப்படும் சிக்கனுக்கு அடிமையாகாத அசைவ பிரியர்கள் கிடையாது.
ஆனால் ஊசி போட்டு வளர்க்கப்படும் பிராய்லர் சிக்கன் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்தாலும் அதிலும் சில ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றது.
எலும்பு உறுதி அடைகிறது
அதிகமான புரதம் நிறைந்துள்ள சிக்கனால் எலும்புகள் உறுதி அடைவதுடன், எலும்புகளை பாதிக்கக்கூடிய ஆஸ்டியோபோரோசிஸ் என்கிற நோய் பாதிப்பு ஏற்படாமலும் தடுக்கின்றது.
அதிகரிக்கும் நினைவாற்றல்
புரதச்சத்து மட்டுமின்றி வைட்டமின் பி12 மற்றும் கோலின் என்ற நினைவாற்றலை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும் இதில் இருக்கின்றது..
சுறுசுறுப்பாக இருக்கலாம்
உடலில் ரத்தச் சோகை ஏற்படுவதும் மற்றும் இரும்புச் சத்து குறைவாக காணப்படுவது போன்றவை உடலுக்கு அவ்வப்போது சோர்வை அளிக்கும்.
இந்த பிரச்சினை நீங்கி இரும்பு சத்து அதிகரிக்க கோழியை சாப்பிடலாம். இதன்மூலம் நிம்மதியான உறக்கம் ஏற்பட்டு, உடல் சுறுசுறுப்புடன் இருக்க உதவி செய்யும்.
புத்துணர்வு உண்டாகும்
நம் உடலுக்கு தேவையான முக்கியமான ஹார்மோன்களில் ஒன்று செரோடோன். இது உடலுக்கு புத்துணர்ச்சியை வழங்கக்கூடியதாக உள்ளது. உரிய முறையில் கோழிக் கறியை சமைத்து சாப்பிடுவதால் செரோடோன் ஹார்மோன் செயல்பட தேவையான டிரிப்டோபான் உற்பத்தி அதிகமாகி, உடலில் புத்துணர்ச்சி அதிகரிக்கும்.