அசைவ பிரியர்களின் ஆட்டு ரத்தப்பொரியல்: அதை இப்படி சாப்பிட்டால் ஆபத்து
அசைவ பிரியர்கள் என்றாலே அவர்களுக்கு ஆட்டு இறைச்சி முதல் ரத்தம் வரை அனைத்தையும் சாப்பிடுவதில் வல்லவர்களாக இருப்பார்கள்.
இந்த பதிவில் மட்டனை விரும்பி சாப்பிடுபவர்களில் ஆட்டுரத்த பொரியலை அதிகமாக சாப்பிடுவதால் ஒரு சில பிரச்சனையும் வரக்கூடும். அது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆட்டு ரத்தபொரியல்
மட்னின் ஈரல் குடல் ரத்தம் போன்றவற்றை சாப்பிடுவதில் அனேகமானோர் ஆவலாக இருப்பார்கள். இதில் ரத்த பொரியலுக்கு அடிமையாகாதவர்கள் யாரும் இல்லை.
ஏனென்றால் இதன் சுவை தனித்துவமாக இருக்கும். இந்த ரத்த பொரியலில் ஹீமோகுளொபின் புரதச்சத்து இரும்புச்சத்து வைட்டமின் பி 12 அமினோ மெினங்கள் நிறைந்துள்ளது.
இது தவிர இதில் 17 வகையான அமில சத்துக்கள் உள்ளன. இதில் அதிக சத்துக்கள் இருக்கிறது என்றாலும் இன்பிளமேஷன் மற்றும் இன்பெக்ஷன்ஸ் இருக்கும்.
எனவே தான் இதை நன்கு சுத்தம் செய்து நன்றாக கழுவிய பின்னரே இதை சமைத்து சாப்பிட வேண்டும். ஆட்டு ரத்தத்தில் ப்யூரின் அதிகமாக காணப்படுகின்றது.
எனவே இதை கொளட் பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிட கூடாது. ஆட்டு ரத்தத்தில் இரும்புச்சத்து அதிகம் காணப்படுகின்றது எனவே இதை அதிகமாக சாப்பிடும் போது இரும்புச்சத்து அதிகமாகி அது உடல் நலத்தில் பெரும் நோய்களை கொண்டு வந்து சேர்க்கும்.
எனவே ஆட்டு ரத்தம் எவ்வளவு பிடிக்கும் என்றாலும் அதை அளவுடன் சாப்பிடுவது நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
