காதுகளை சுத்தப்படுத்தும் ஹெட்போன் வடிவ கருவி! அமெரிக்காவில் கண்டுபிடிப்பு
காதுகளில் இருக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று அழுக்குகள் சேர்வது. அழுக்குகள் சேர்வதால் காது கேட்கும் திறனின் அளவும் குறைகிறது.
வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது அங்கே தூசு துணிக்கைகள் என்பவை காதின் துவாரம் வழியாக சென்று அழுக்குகளாக சேர்ந்து சேர்ந்த பல பின்விளைவுகளையும் ஏற்படுத்திவிடும்.
காலப்போக்கில் அதீத காதுவலி, காது சரியாக கேட்காமை, காதில் எதையோ வைத்து அடைத்ததைப் போன்ற ஒரு உணர்வு ஏற்படும். இந்த காதுகளில் உள்ள அழுக்குகளை போக்குவதற்கு பல வழிகளை பின்பற்றுவோம்.
தற்போது அதை இலகுவாக்க அமெரிக்க நிறுவனமொன்று புதிய கருவியொன்றை கண்டுபிடித்துள்ளது.
ஏர்வேக்ஸ் எனப்படும் ஒரு வகை மெழுகு காதுகளில் இயற்கையாகவே உருவாகும். இந்த மெழுகு அளவுக்குமீறி காதுகளில் சேர்ந்தால் கேட்கும் திறன் குறைகின்றது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் காதுகளில் ஏற்படும் உறுத்தல் இயற்கையாகவே காதுகளை சுத்தம் செய்யத் தூண்டும்.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பாதுகாப்பாக செவிகளை சுத்தம் செய்வதற்கு ஹெட்போன் வடிவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஓட்டோசெட் என்ற இந்த கருவியை, காதில் பொருத்திக் கொண்டவுடன் அது தானியங்கி முறையில் காதுக்குள் தண்ணீரை பீய்ச்சி அடித்து, சுத்தம் செய்தபின் மீண்டும் உறிஞ்சப்படுகிறது.
இந்த கருவியை தற்போது மருத்துவர்கள் மாத்திரமே பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.