தலையை வெட்டிய பிறகும் உயிருடன் திரியும் கோழி: இந்த அதிசய கதையை கேட்டால் அசந்து போவீங்க!
பொதுவாகவே தலை இல்லாமல் எந்த ஒரு உயிரினமும் வாழமுடியாது, உடல் உறுப்புக்களில் தலை மிகவும் முக்கியமானது.
ஆனால் ஒரு கோழி தலையில்லாமல் 18 மாதங்கள் உயிர் வாழ்கின்தென்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
தலை இல்லாமல் வாழும் கோழி

அமெரிக்காவில், கொலொரடோ என்ற பகுதியில் வெட்டப்பட்ட ஒரு கோழி உயிருடன் 18 மாதங்களாக வாழ்ந்து வருகின்றது. இந்த விடயத்தை கேட்கும் போதே ஆச்சரியமாக இருக்கின்றதே! என்றால் ஆமாம். இதன் கதை என்னவென்றால்,
லோய்டி ஓல்சென் என்ற விவசாயி ஒருவர் தனது இரவு உணவுக்காக கோழியை சமைக்க முடிவெடுத்திருக்கிறார். சமைப்பதற்கு தயாராகி கோழியின் தலையை வெட்டியிருக்கிறார்.
அந்தக் கோழியை வெட்டிய பிறகும் அது தரையில் நின்று சாதாரணமாக நடந்துகொண்டிருந்தது. இரைத் தேட முயற்சிப்பது போன்ற கோழியின் நடவடிக்கையைப் பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறார் லோய்டி.

தலையில்லாமலும் உயிரோடு இருந்ததால் அதனை அப்படியே வளர்க்க முடிவு செய்தார். லோய்டி அந்த 5 மாத கோழியை கோடாரி கொண்டு வெட்டும் போது கழுத்து நரம்பு சரியாக அறுக்கப்படவில்லை.
மேலும் மூளையின் பெரும்பகுதியும் சேதமடையாமல் இருந்துள்ளது. தண்ணீர் மற்றும் பால் கலந்து உணவாக தொண்டையில் ஊட்டியிருக்கிறார்.

தலையில்லாமல் இருக்கும் கோழி பற்றிய செய்தி தற்போது வைரலாகி வருகின்றது.
இந்தக்கோழியின் தலையை வெட்டி தற்போது 18 மாதங்கள் ஆகியும் இன்னும் உயிருடன் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.