ஹெட் போன்... இயர் போன் யூஸ் பண்றீங்களா? நீங்க பெரிய ஆபத்துல இருக்கீங்க ஜாக்கிரதை
இன்றைய உலகில் பெரும்பாலும் ஹெட்போன் உபயோகிப்போரின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. இதனால் ஏற்படும் ஆபத்து என்ன? என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஹெட் போன்
இன்றைய காலத்தில் மார்க்கெட்டிலும் அதிகமான நிறுவனங்கள் ஹெட் போன்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
தங்களின் பொழுதுபோக்கிற்காகவும், விளையாட்டாகவும் பயன்படுத்தப்படும் ஹெட் போன்களினால் எவ்வளவு பாதிப்பு ஏற்படுகின்றது என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்வதில்லை. ஆனால் நாளடைவில் இதன் பாதிப்பை உணர்கின்றனர்.
நமது காதுகளால் 65 டெசிபெல் வரை ஒரு வலியை தாங்க முடிகிறது. ஆனால் நாம் பயன்படுத்தும் ஹெட் போனின் ஒலி குறைந்தது 100 டெசிபல் ஆகும்.
அதாவது 100 டெசிபெல் ஒலியை தொடர்ந்து 10 மணி நேரத்திற்கு மேல் ஹெட்போனில் கேட்டால், நமக்கு காது கேளாத நிலை ஏற்படும்.
நாம் ஹெட்போன் பயன்படுத்துவதினால் நம் காதுகளில் உள்ள செல்களின் மீது மிகவும் தவறான தாக்கத்தை எதிர்கொள்கிறோம்.
ஹெட்போனை தொடர்ந்து நாம் பயன்படுத்தி வந்தால், காதுகளில் செல்கள் சிதைவு ஏற்படுவதுடன், பாக்டீரியாவும் வேகமாக தோன்றுகின்றது.
மேலும் ஹெட்போனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் தலைவலி, தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் போன்றவற்றாலும் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகின்றது.
ஆதலால் இம்மாதிரியான பிரச்சினையிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும் என்றால் ஹெட்போன் பயன்படுத்துவதை கட்டாயம் தவிர்க்கவும்.