தினமும் தலைக்கு குளிப்பது நல்லதா? மருத்துவர்கள் கூறும் அறிவுரை
பொதுவாக நம்மில் பெரும்பாலானோர் தினமும் குளிக்கும் பழக்கம் உடையவர்கள் காணப்படுவார்கள்.
இப்படி குளித்தாலும் சிலர் தினமும் தலைக்கு குளிக்க மாட்டார்கள். வாரம் ஒருமுறை தான் தலைக்கு குளிப்பார்கள். இன்னும் சிலர் தினமும் தலை குளிக்காமல் இருக்கமாட்டார்கள்.
குளிப்பது ஆரோக்கியம் கொடுக்கின்றது என்ற கருத்து பரவலாக இருந்தாலும் இன்னும் சிலருக்கு இப்படி தினமும் தலைக்கு குளிப்பது நல்லதா? கெட்டதா? என சந்தேகமாக இருக்கும்.
அந்த வகையில் தினமும் குளிப்பது குறித்து மருத்துவர் கூறும் விளக்கத்தை பார்க்கலாம்.
தலைக்கு குளிப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
1. தலைமுடி சாதாரணமாக இருந்தால் தலைக்கு தினமும் குளிக்காமல் சில நாட்களுக்கு ஒருமுறை குளிக்கலாம்.
2. அதிக தூசி மற்றும் அழுக்குகளை ஈர்க்கும் கூந்தலை (fine hair) கொண்டவர்களாக இருந்தால் தினமும் தலைக்கு குளிக்கலாம்.
3. வெளியில் அடிக்கடி செல்ல வேண்டிய தேவை இருப்பவர்கள் இவ்வாறு தலைக்கு குளிக்கலாம்.
4. தினமும் குளிப்பவர்கள் உங்கள் சருமத்திற்கேற்ற தயாரிப்புக்களை பயன்படுத்த வேண்டும்.
5. தலைக்கு குளித்த பின்னர் தலையை சீவ கூடாது. இது தலைமுடியை சேதப்படுத்தும்.
6. அடிக்கடி குளிப்பதால் தலைமுடி உதிர்வு அதிகமாகும்.
7. ஒரே நாள் அல்லது இரவில் தலைமுடிக்கு ஒரு முறைக்கு மேல் எண்ணெய் தடவ வேண்டாம்.
8. முடி தடிமனாக, சுருளாகவும் இருந்தால் அதற்கேற்ற டிசைன் கொண்ட பொருட்களை பயன்படுத்த வேண்டும் என பரிந்துரைக்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |