இரண்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ளீர்களா? எச்சரிக்கை பதிவு இதோ
இன்றைய டிஜிட்டல் முறையினால், வங்கித்துறை குறிப்பிடத்தக்க மாற்றத்தில் இருப்பதுடன், வாடிக்கையாளர்களுக்கு இவை வசதியையும், எளிமையையும் கொடுத்துள்ளது.
இரண்டு வங்கி கணக்குகள்
தற்போதைய டிஜிட்டல் முறையினால், பண பரிமாற்றங்கள் வீட்டில் இருந்தபடியே கணக்குகளை கையாளப்படுகின்றது. இதனால் வங்கி சேவை மிகவும் சுலபமாகிவிட்டது.
ஆன்லைனில் KYC வீடியோவின் வருகையால், வங்கிக் கணக்கை திறப்பதற்கான செயல்முறை இன்று நெறிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் தனிநபர்கள் பல்வேறு வங்கிக் கணக்கினை தேர்ந்தெடுத்து வருகின்றனர். இவ்வாறு பல வங்கிகளில் கணக்கு வைத்திருப்பது சில நன்மைகளை அளித்தாலும், சில சொந்த சவால்களையும் சந்திக்க வேண்டியுள்ளது.
அதாவது பல வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்த பட்ச இருப்பு தொகை வைத்து பராமரிக்க வேண்டும். அவ்வாறு இலையெனில் அபராதக் கட்டணம் செலுத்த வேண்டிய சூழ்நிலை இருக்கின்றது.
இந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளினால் ஆன்லைன் மோசடி, மோசடிகள் சம்பந்தமாக பிரச்சினைகளாக மாறியுள்ளது. ஆம் ஏராளமான வங்கிக் கணக்கினை இயக்குவது மோசடி நபர்களிடம் சிக்குவதற்கு எளிதாகின்றது. ஆகவே கூடுதல் எச்சரிக்கை தேவை.
மற்றொரு பிரச்சினை என்னவெனில், நாம் வைத்திருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்கில் நீண்ட காலம் பரிவர்த்தனை செய்யாமல் இருந்தால் கணக்குகள் செயலிழக்க செய்ய முடியும். இதற்கு நீங்கள் கூடுதல் கட்டணமும், நிர்வாகத்தில் சில சிக்கலையும் ஏற்படுத்துகின்றது.
இரண்டு முதல் மூன்று வங்கிக் கணக்குகளை நிர்வகிப்பது ஒப்பீட்டளவில் நிர்வகிக்கக்கூடியதாக இருந்தாலும், பெரிய எண்ணிக்கையைக் கையாள்வது சில நபர்களுக்கு சவாலாக இருக்கலாம்.
பராமரிக்க வேண்டிய கணக்குகளின் எண்ணிக்கையைத் தீர்மானிப்பதற்கு முன், தனிப்பட்ட நிதித் தேவைகள் மற்றும் திறன்களை மதிப்பிடுவது முக்கியமானது.
பரிவர்த்தனைகள் மற்றும் நிலுவைத் தேதிகளுக்கான தானியங்கு அறிவிப்புகளை அமைத்தல் மற்றும் மோசடியில் இருந்து பாதுகாக்க வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துதல் போன்ற பயனுள்ள உத்திகளைப் பின்பற்றலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |