7 மணிக்குள் இரவு உணவை சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா?
தற்போதைய காலக்கட்டத்தில் சரியான நேரத்தில் உணவருந்தால் பல பிரச்சினைகளை நபர்கள் சிக்கிக் கொள்கின்றனர்.
தாமதமாக உணவு அருந்துவதால் உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்பதுடன், அதிக ரத்த அழுத்தம், உடல் எடை அதிகரித்தல் இவ்வாறான பிரச்சினை ஏற்படுகின்றது.
தற்போது இரவு உணவு எந்த நேரத்தில் உண்ண வேண்டும் என்பதை குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
வல்லுனர்களின் கூற்றுப்படி மனிதர் இரவு உணவு 7 மணிக்குள் உண்ண வேண்டுமாம். ஒருவேலை இரவு முழுவதும் கண் விழிப்பவராக இருந்தாலோ அல்லது அந்த நேரத்தில் பசி எடுத்தாலோ சிறிது ஸ்நாக்ஸ் எடுத்துக்கொண்டு பசியை போக்கிக் கொள்ளவும்.
7 மணிக்குள் இரவு உணவு சாப்பிட்டால் ஏற்படும் நன்மை
நாம் சரியான நேரத்தில் கண்விழிக்க வேண்டும், எப்போது உணவருந்த வேண்டும் என்பதை தொடர்வு படுத்துவதே சிர்க்காடியன் இசைவு என்ற கடிகாரம் ஆகும். இதனால் உடம்பு எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் சீரான வகையில் இயங்குமாம்.
இதனால் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றங்கள் சீராக இருப்பதுடன், உடம்பிற்கு ஓய்வு கொடுப்பதால் கல்லீரல் எந்தவொரு அழுத்தமில்லாமல், நச்சுத்தன்மையை வெளியேற்றும் வேலையை செய்யுமாம்.
இரவு 7 மணிக்கும் உணவு உட்கொண்டால் உடலில் இன்சுலின் உணர்திறனை இது அதிகரிப்பதால், ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக வைப்பதுடன், டைப் 2 நீரிழிவு அபாயத்தை குறைக்கின்றது.
இரவு சீக்கிரமாக உணவு உட்கொள்வதால், செரிமான பிரச்சினை இல்லாமல் ஆழ்ந்த நித்திரை மேற்கொள்ள முடியும்.
குறிப்பாக அதிக கலோரிகள் கொண்ட ஆரோக்கியற்ற உணவு பொருட்களை உட்கொள்வதால் இதய ஆரோக்கியம் பாதிக்கப்படும். இரவு உணவை மிகவும் விரைவாக உட்கொள்வது இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றது.
இன்சுலின், கார்டிசால் போன்ற முக்கிய ஹார்மோன்கள் நமது உடலில் தினசரி சுரப்பை ஆகும். இரவில் விரைவில் உணவருந்துவது, ஹார்மோன்களை இயற்கையாகவே சமநிலையில் வைத்திருக்க உதவுகின்றது. இரவு உணவிற்குப்பின் 20 நிமிடம் வாக்கிங் செய்து விட்டு வந்தால் செரிமானம் ஆவதை எளிதாக்கும்.
இரவு உணவு உண்டதும் தூங்கச் செல்வது புவியீர்ப்பு விசையானது நமது செரிமான பாதைக்குள் உணவு நகர்ந்து செல்வதை தடை செய்கின்றது. மேலும் இரவில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவை உட்கொள்ளும் பட்சத்தில் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து பிரச்சினையை ஏற்படுத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |