அன்று ரூ.1600 சம்பளம்.. இன்று ரூ.9,800 கோடிக்கு அதிபதி: தொழிலதிபரான இளம்பெண்
தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களை இயற்கை முறையில் விற்பனை செய்து தொழில் துறையில் அசைக்க முடியாத இடத்தை அடைந்திருக்கிறார் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண்.
யார் இவர்?
ஹரியானா மாநிலத்தின் குர்கிராம் நகரைச் சேர்ந்த கஸல், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். பள்ளிப்படிப்பை ஹரியானாவில் படித்த கஸல், 2010-ம் ஆண்டு பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் கணினி துறையில் பட்டப்படிப்பு முடித்தார்.
நவீன ஓவியம் மற்றும் வடிவமைப்பு கலை பற்றிய படிப்பையும் நியூயார்க் அகாடமியில் 2013-ல் நிறைவு செய்தார்.
2008 முதல் 2010 வரை NIIT நிறுவனத்தில் கார்ப்பரேட் பயிற்றுனராக வேலை செய்த கஸல், பலருக்கும் கணினி மென்பொருள் மற்றும் நிரல்களை கற்றுக் கொடுத்தார்.
இந்த வேலைக்கு அவருக்கு கிடைத்த மாதச் சம்பளம் வெறும் ரூ.1,200 மட்டுமே. 2016-ம் ஆண்டு தனது கணவரோடு சேர்ந்து மாமா எர்த் (MamaEarth) என்ற நிறுவனத்தை தொடங்கினார்.
தொழில் சாதனை
சுற்றுச்சூழல் மீது இவருக்கு இருந்த ஆர்வத்தின் காரணமாக, சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பாதிக்காத வகையில் இளம் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆரோக்கியம் சார்ந்த பொருட்களை தயாரித்து விற்பனை செய்தார்.
இவரின் நிறுவனம் மறுசுழற்சி செய்யும் வகையிலான பேக்கேஜ் மற்றும் இயற்கை மூலப்பொருள்களை பயன்படுத்துவதில் கவனம் செலுத்தியது.
இவரது பொருட்கள் விலை குறைவாக இருப்பதோடு சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படாது மேலும் இவற்றில் எந்த நச்சுப்பொருளும் சேர்க்கப்படவில்லை.
தற்போது ஆரோக்கியம், குழந்தைகளுக்கான அழகு சாதனப் பொருட்கள் என 5 பொருட்களில் ஆரபித்த இவரின் நிறுவனம் தற்போது 500-க்கும் மேற்பட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறது.
சொத்து மதிப்பு
ஆசியாவிலேயே பாதுகாப்பாக தயாரிக்கப்பட்டது (MADE-SAFE) என்ற சான்றிதழை பெற்ற ஒரே நிறுவனம் mamaearth மட்டுமே.
கஸலும் அவரது கணவர் வருனும் இந்த தொழில் தொடங்க முதலில் ரூ.25 லட்சம் முதலீடு செய்தனர். அது இப்போது ரூ.9,800 கோடியாக பெருகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |