தெருவில் கிடந்த மர்ம சூட்கேஸ்...திறந்து பார்த்த போது காத்திருந்த பேரதிர்ச்சி - சிசிடிவி சிக்கிய ஆதாரம்
மனைவியை மர்மமான முறையில் கொலை செய்து சூட்கேஸில் வைத்து தெருவில் வீசி சென்ற கணவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் உள்ள IFFCO சவுக் என்னும் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சூட்கேஸ் கிடப்பது குறித்து போலீஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த மர்ம சூட்கேஸை திறந்து பார்த்துள்ளனர்.
அதற்குள், பெண் ஒருவரின் உடல் இருந்து அனைவருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து விசாரணையில் அப்பகுதியில் ஆட்டோவில் வந்த நபர் ஒருவர், சூட்கேஸை சாலையில் வைத்து விட்டு சென்றது சிசிடிவி மூலம் தெரிய வந்துள்ளது.
சூட்கேஸை வைத்த நபர் பெயர் ராகுல். அவரின் மனைவியை தான் கொலை செய்து சூட்கேஸில் வைத்துள்ளார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ராகுலின் மனைவியான பிரியங்கா, குடும்பத்தை உதறி விட்டு ராகுலை கரம்பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
சூட்கேஸில் கிடந்த பெண்ணின் சடலம்
இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தை ஒன்றும் உள்ளது. தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் ராகுலின் சம்பளம், குடும்பம் நடத்தவே சரியாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே மனைவி பிரியங்கா, அடிக்கடி செல்போன், டிவி, ப்ரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை கேட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதன் பெயரில், அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்கள் முன்பாகவும் அவர்களுக்கு இடையே மோதல் உருவாகி உள்ளது.
அப்போது சண்டை முற்றி கடும் கோபத்தில் இருந்த ராகுல், மனைவி பிரியங்காவை கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதன் பின்னர் கடைக்கு சென்று சூட்கேஸ் வாங்கி வந்த ராகுல், மனைவியின் உடலை அதில் வைத்துள்ளார்.
ராகுல் பெயர் மனைவியின் கையில் பச்சை குத்தி இருந்ததால், அதனை நீக்கி காயம் உருவாக்கவும் செய்துள்ளார் ராகுல்.
பின்னர், ஆட்டோவில் ஏறி ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் சூட்கேஸை அவர் போட்டு விட்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்த தகவல் ஹரியானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.