மருத்துவரின் அதிர்ச்சி செயல்... மாட்டு சாணத்தை சாப்பிட்டு கோமியத்தை குடிக்கும் சர்ச்சைக்குரிய காட்சி
மாட்டு சாணம் மற்றும் கோமியம் பல நோய்களை தீர்க்கும் குணம் கொண்டதாக நம்பபடுகிறது.
ஆனால் அறிவியல் ரீதியாக அப்படியான எந்த விதமான சான்றும் இல்லை. இந்நிலையில் டாக்டர் ஒருவர் சமீபத்தில் மாட்டு சாணத்தை சாப்பிட்டு கோமியத்தை குடிக்கும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைலராக பரவி வருகிறது.
குறித்த மருத்துவர் அரியானாவில் கர்னல் பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் என்றும் தன் பெயர் மனோஜ் மிட்டல் என்றும் அறிமுகப்படுத்திக்கொள்கிறார்.
Dear Doctors of Twitter,
— عادل مغل ?? (@MogalAadil) November 13, 2021
I present you this gentleman!pic.twitter.com/YtFHGo9cQH
இந்த வீடியோவில் அவர் தரையில் இருந்த மாட்டு சாணத்தை எடுத்து ருசித்து சாப்பிடுகிறார்.
அதன் பின்பு அதன் பலன்களை சொல்கிறார். அதன் பின்பு மாட்டு கோமியத்தை குடித்தால் என்னென்ன வியாதிகள் தீரும் எனவும் பட்டியலிடுகிறார்.
மேலும் அவர் பெண்கள் நார்மல் டெலிவரி பெற மாட்டு சாணத்தையும் கோமியத்தையும் குடிக்க வேண்டும் என்றும், அப்படி அவர்கள் செய்தால் கட்டாயம் அவர்கள் சிசேரியன் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என கூறுகிறார்.
இந்த வீடியோ பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.