குப்பையில் கிடைத்த புத்தகம் ரூ22 லட்சத்திற்கு ஏலம்... அப்படியென்ன ஸ்பெஷல்னு தெரியுமா?
இங்கிலாந்தில் குப்பையில் கண்டெடுக்கப்பட்ட புத்தகம் ஒன்று பல லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.
குப்பையில் கிடைத்த பொக்கிஷம்
இங்கிலாந்து நாட்டில் அரியவகை பொருட்கள் மற்றும் புத்தகங்கள் மீது மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு பல நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றது.
ஒருவர் இறந்துவிட்டால் அவரது குடும்பத்தினர் ஏல நிறுவனங்களை தொடர்பு கொண்டு அவர் சேகரித்த பொருட்களின் மதிப்பினை உணர்ந்தவர்களிடத்தில் அதனை விற்பனை செய்கின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் ப்ரிக்ஸாம் பகுதியைச் சேர்ந்த டேனியல் பியர்ஸ் என்ற ஏல நிறுவத்திற்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது.
அதாவது நபர் ஒருவர் உடல்நலக் குறைவால் இறந்த நிலையில், அவரது உடைமைகளை ஏலத்தில் விடுவதற்கு அழைப்பு வந்துள்ளது. குப்பை போன்று குவிந்து கிடந்த புத்தகத்தினை டேனியல் பியர்ஸ் பார்த்துள்ளார்.
உலகம் முழுவதும் பிரபலமான ஹாரிபாட்டர் புத்தகத்தின் முதல் பதிவு ஆகும். ஜே.கே.ரோலிங் எழுதிய இந்த முதல் புத்தகமானது 500 பிரதிகள் மட்டுமே அச்சடிக்கப்பட்டுள்ளது.
அதில் 300 பிரதிகள் லண்டன் நூலகங்களில் உள்ளது. முதல் பிரதியில் அட்டையின் பின் பக்கத்தில் எழுத்து பிழைகள் இருக்கும் என்பதால், அதனை வைத்து இந்த புத்தகம் முதல் பிரதி என்று கண்டறிந்த பியர்ஸ் இதனை ஏலத்தில் விடுத்துள்ளார்.
ஹாரிபாட்டர் ரசிகர்கள் அதை போட்டிப்போட்டு ஏலத்தில் எடுக்க இறுதியில் அது இந்திய மதிப்பில் ரூ.22 லட்சத்திற்கு ஏலத்தில் விற்பனையானது. இதனால் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |