இளவரசர் ஹாரி-மேகன் தம்பதியருக்கு பிறந்த 2வது குழந்தை… என்ன குழந்தை தெரியுமா?
இளவரசர் ஹாரி- மேகன் தம்பதிகளுக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ளது.
இங்கிலாந்து இளவரசர் சார்லசின் இளையமகன் ஹாரி, பிரபல நடிகை மேகன் மார்க்கலை, 2018ல் திருமணம் செய்தார்.
இந்த தம்பதிக்கு, ஆர்ச்சி என்ற, 2 வயது ஆண் குழந்தை உள்ளது. இவர்கள், அரச குடும்ப பொறுப்புகளை துறந்து, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு தங்களுக்கு 2வது குழந்தை பிறக்கப்போகிறது என அரச தம்பதி அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், மேகன் மார்க்கல், நேற்று பெண் குழந்தையை பெற்றெடுத்தார். 3.17 கிலோ எடையில் பிறந்த இந்த குழந்தைக்கு, ‘லில்லிபெட் டையானா’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஹாரியின் தாய், மறைந்த டையானாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை ஹாரி – மேகன் தம்பதியின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தி உள்ளார்.