பிரபஞ்ச அழகி ஹர்னாஸ் சாந்து தலையில் வைர கிரீடம்: எத்தனை கோடினு தெரியுமா?
பிரபஞ்ச அழகியாக தெரிவு செய்யப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த ஹர்னாஸ் கவுர் சாந்து தலையில் 23 கோடி ரூபாய் மதிப்புள்ள கிரீடமும், கையில் 1.8 கோடி ரூபாய் பரிசு தொகையும் கொடுக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் ஆண்டுதோறும் பிரபஞ்ச அழகி (miss universe) போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வரிசையில் 70-வது மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டி இஸ்ரேல் நாட்டில் உள்ள சுற்றுலா தலைநகரமான எய்லாட் நகரில் நடைபெற்றது.
உலகம் முழுவதிலும் இருந்து 80 நாடுகளை சேர்ந்த அழகிகள் இந்த போட்டியில் கலந்து கொண்ட நிலையில், இதில் இந்தியாவின் சார்பில் பஞ்சாபை சேர்ந்த 21 வயது ஹர்னாஸ் கவுர் சாந்து பங்கேற்றார்.
கடந்த ஒரு மாதமாக பல்வேறு சுற்றுகளாக போட்டி நடத்தப்பட்டு அழகிகள் இறுதிச்சுற்றுகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர். அனைத்து சுற்றுகளிலும் வெற்றி பெற்று பிரபஞ்சத்தின் அழகியாக தேர்வானார்.
The new Miss Universe is...India!!!! #MISSUNIVERSE pic.twitter.com/DTiOKzTHl4
— Miss Universe (@MissUniverse) December 13, 2021
இவருக்கு கிடைத்த பரிசு என்ன?
- உலகின் முன்னணி அழகுசாதன தயாரிப்பு நிறுவனங்கள் இவரை ஒப்பந்தம் செய்ய போட்டி போடுகின்றனர்.
- உலகில் எந்த நாட்டிற்கும் இவர் செல்லலாமாம். இவருக்கு சேவை செய்த பல நிறுவனங்கள் காத்திருக்குமாம். மேலும் எந்த ஹொட்டலில் தங்கினாலும் இலவசமாம்.
- மிஸ். யுனிவர்ஸ் அமைப்பின் தலைமை தூதர் இவர் தானாம். இதனால் இந்த அமைப்பு சார்பில் நடைபெறும் விழாக்கள், மீடியா சந்திப்பு, நிகழ்ச்சி என சேவைகளில் பிரபஞ்ச அழகி என்ற பட்டத்துடன் இவர் பங்கேற்பார்.
- ஒரு ஆண்டு முழுவதும் நியூயார்க்கில் பிரபல நட்சத்திர ஹொட்டலில் மிஸ். யுனிவர்ஸ் அபார்ட்மெண்டில் எப்போது வேண்டுமானாலும் தங்கிக் கொள்ளலாமாம்.
- இவரின் தலையில் சூடப்பட்ட கிரீடத்தின் மதிப்பு மட்டும் 23 கோடியே 80 லட்சம் ஆகும்.
- 18 கேரட் தங்கத்தில் 1770 வைரங்கள் பதிக்கப்பட்ட இந்த கிரீடத்தினை அடுத்த ஒரு வருடத்திற்கு முழுவதும், தனது தலையில் சூடிக்கொண்டு எங்கும் செல்லமுடியுமாம். Mouawad என்ற நிறுவனம் இதனை தயாரித்துள்ளது.
- 1.8 கோடி பிரபஞ்ச அழகிக்காக பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர ஒவ்வொரு மாதமும் 6 டிஜிட் சம்பளம் வழங்கப்படுமாம்.
- ஆனால் இவரது சம்பளம் எவ்வளவு என்ற விபரத்தினை மிஸ்.யுனிவர்ஸ் குறிப்பிடாதாம்.
- ஒருபுறம் புகைப்பட கலைஞர்கள் புகைப்படம் எடுப்பதற்கு காத்திருப்பார்கள். உடைகள், காலணிகள், நகைகள், அழகு சாதன பொருட்கள் இவைகள் வழங்கப்படுமாம்.
REMEMBER THIS? The top 5 take on the final question during the 69th MISS UNIVERSE show! ? pic.twitter.com/MpN97vWIC8
— Miss Universe (@MissUniverse) December 14, 2021
அதோடு மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வெல்வதற்கு முன்னர் அவரை இன்ஸ்டாகிராமில் வெறும் 2.9 லட்சம் ஃபாலோயர்கள் தான் பின்தொடர்ந்து உள்ளார்கள். தற்போது அந்த எண்ணிக்கை 1.7 மில்லியனாக மாறியுள்ளது. மாடலான ஹர்னாஸ் இரண்டு பஞ்சாபி மொழி படங்களில் நடித்துள்ளார்.
கூகுளில் இவரது எடை, உயரம், வயது, குடும்ப விபரம் என அனைத்து விபரங்களையும் தேடி வருகின்றனர்.