அடிக்கடி Soft drink எடுத்துக் கொள்பவருக்கு காத்திருக்கும் ஆபத்துக்கள்! நீங்க தெரிஞ்சுக்கோங்க..
பொதுவாக நாம் வெளியில் சென்றாலும் சரி, வீட்டில் ஏதாவது விஷேசங்கள் வந்தாலும் அநேகமானவர்கள் குளிர்பானங்கள் கொடுப்போம்.
இந்த பானங்கள் கண்ணை கவரும் நிறங்களில் இருப்பதால் சிறுவர்கள் அதிகம் விரும்பும் பானங்களில் இது போன்ற குளிர்பானங்கள் முதல் இடம் பிடிக்கிறது.
மேலும் கோக், பெப்சி, ஆரன்ஜி கிரஸ் போன்ற பானங்கள் இவற்றுள் உள்ளடங்குகிறது. இதில் அதிகமான சக்கரை மற்றும் கார்பனேற்றப்பட்டிருக்கும் இதனால் சிறுவர்களின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
இதனை தொடர்ந்து பெரியவர்கள் அடிக்கடி எடுத்துக் கொள்வதால் உடல் பருமன் அதிகரிக்கும் என மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். தொடர்ந்து உடல் நிறை குறியீட்டெண் ஆனது இதய நோய், நீரிழிவு மற்றும் சில வகையான புற்றுநோய் போன்ற நோய் நிலைமைகள் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது.
குளிர்பானங்களில் கலக்கப்படும் அமிலங்கள் பற்களில் சிறிது நேரம் இருந்தால் அது காலப்போக்கில் பற்சொத்தை, பற்களில் ஒரு வகையான குளிர்ச்சி மற்றும் பற்சிப்பி அரிக்கப்பட்டு மோசமான பல் சிதைவுக்கும் ஆளாகுவீர்கள்.
சிறுவர்களுக்கு அடிக்கடி நீர்பபோக்கு ஏற்படுகிறதா? அதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். பொதுவாக குளிர்பானங்களில் சர்க்கரை, சோடியம் மற்றும் காஃபின் போன்றவைகள் உள்ளடக்கங்களாக இருக்கும் இந்த பதார்த்தங்கள் நீரிழப்பு பிரச்சினை ஏற்படுத்தும்.
அந்தவகையில் அடிக்கடி குளிர்பானங்கள் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் ஆபத்துக்களை கீழுள்ள வீடியோவில் படங்களுடன் தெரிந்துக் கொள்ளலாம்.