viral video: அன்பில் மனிதர்களை மிஞ்சும் ஹார்ன்பில் பறவைகள்... கூடு கட்டும் அரிய காட்சி
ஹார்ன்பில் பறவைகள் மழைக்காலத்துக்கு முன்னர் தங்களின் கூட்டை அமைத்துக்கொள்ளும் அரிய காட்சியொன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
ஹார்ன்பில் பறவையின் குணங்கள்
ஹார்ன்பில் எனப்படுவது வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படும் ஒரு வகை பறவை இனமாகும்.இந்த பறிவை தழிழ் மொழியில் இருவாட்சி பறவை என்ற பெயரால் அழைக்கப்படுகின்றது.
இந்த ஹார்ன்பில் இனத்தின் பெண் பறவையானது மரங்கள் அல்லது பாறைகளில் இருக்கும் துளைகள் அல்லது பிளவுகளில் முட்டையிட்டு அடைக்காத்து குஞ்சு பொரிக்கும்.
ஒரு தடவையில் இவை 6 முட்டைகள் வரையில் இடும். அடை காக்க ஆரம்பித்ததுமே பெண்பறவை மரம் அல்லது பாறை துளைகளின் நுழைவாயிலைக் கழிவுகள் மற்றும் சேற்றால் மூடி, தன்னைத்தானே அடைத்துக் கொள்ளும்.
அதில் ஒரு சிறிய துளையை மட்டும் விட்டு வைத்திருக்கும். அதன் மூலம் தான் ஆண் பறவை உணவு கொடுக்கிறது.
முட்டையை பாட்புகள் அல்லது வேறு பிராணிகள் சாப்பிட வருவதை தடுப்பதற்கே இவை இவ்வாறு செய்கின்றன.
பெண் பறவையின் தியாகம் மெய்சிலிர்க்க வைக்கும் அதே வேளையில் ஆண் பறவை காடெங்கும் தேடியலைந்து தனது அலகுகளுக்குள் சேமித்து எடுத்து வரும் உணவை கூட்டின் துவாரம் வழியே பறவைக்கு ஊட்டி விடுகிறது.
குஞ்சுப்பொரித்த பின்னரும் குஞ்சுகள் பறக்க ஆரம்பிக்கும் வரையில் பெண் பறவை மிகவும் கவனமாக பார்த்துக்கொள்ளும் அது வரையில் ஆண் பறவை பெண் பறவையையும் அதன் குஞ்சுகளையும் கூட்டில் வைத்தே பார்த்துக்கொள்கின்றது.
இறக்கும்வரை இந்த பறவைகள் இணைந்தே வாழும். இந்த பறவை ஒரே துணையுடன் வாழும் குணம் கொண்டது. இணைபறவை இறந்தால் கூட இதன் பின்னர் தனித்து வாழ ஆரம்பித்துவிடும். மனிதர்களுடன் ஒப்பிடுகையில் இந்த பறவைகளின் காதலும் பாசமும் மெய் சிலிர்க்க வைக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |