விமான நிலையத்தில் 2 கைக்கடிகாரத்தால் சிக்கிய ஹர்திக் பாண்டியா - அவரே அளித்த விளக்கம்!
இந்திய கிரிக்கெட் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து மும்பை சுங்கத்துறை அதிகாரிகள் விலை மதிப்புள்ள இரண்டு கைக்கடிகாரங்களை பறிமுதல் செய்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா துபாயில் இருந்து இந்தியா திரும்பிய போது, மும்பை விமான நிலையத்தில் வைத்து சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் இரண்டு வாட்ச் இருந்துள்ளது.
அதில் ஒன்று தங்க வாட்ச், இரண்டும் புதிய வாட்ச் ஆகும். அதை ஒன்றை கையில் கட்டி இருந்துள்ளார். இன்னொன்று அவரின் கை பையில் இருந்துள்ளது. இதன் இரண்டின் மதிப்பு 1.5 கோடி ஆகும்.
இதனையடுத்து, இந்தளவு விலைமதிப்புள்ள வாட்சுகளை வாங்கியதற்கான ரசீதை சுங்கத்துறையினர் கேட்டுள்ளனர். ஆனால் ஹர்திக் பாண்டியாவிடம் இதற்கான ரசீது இல்லை.
இதனால், அவரின் வாட்ச் இரண்டும் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ரசீது இல்லாமல் அதிக மதிப்புள்ள தங்கம் எடுத்து வந்த காரணத்திற்காக ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், இதுகுறித்து தவறாக பரவும் கருத்துக்கு ஹர்திக் பாண்டியா விளக்கம் அளித்து இருக்கிறார். அதில், மும்பை விமான நிலையத்திற்கு வந்த பின்னர், தாமாக முன் வந்து அதிகாரிகளிடம் நான் எடுத்து வந்த பொருட்களை காண்பித்து சுங்க வரி செலுத்துவதாக கூறினேன்.
இதற்கு ஒத்துழைப்பு அளித்த அதிகாரிகள், பொருட்களுக்கான ஆவணங்களை சமர்ப்பிக்க கூறினர். நானும் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு தந்து ஆவணங்களை சமர்ப்பித்துள்ளேன்.
பொருட்களுக்கான சுங்க வரியை செலுத்த அதிகாரிகள் முறையான மதிப்பீடு செய்து வருகின்றனர். ஆனால், சமூக வலைத்தளங்களில் இதுதொடர்பாக தவறான கருத்துகள் உலவுகின்றன.
மேலும், அந்த கைக்கடிகாரங்களின் மதிப்பு சுமார் ரூ.1.5 கோடி இருக்கும். ஆனால், சமூக வலைத்தளங்களில் ரூ.5 கோடி என்று தவறாக கூறி வருகின்றனர். நான் இந்நாட்டின் சட்டத்தை மதிக்கும் குடிமகன்.
அரசு துறைகளுக்கு மரியாதை தருபவன். தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் முற்றிலும் ஆதாரமற்றவை என ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
— hardik pandya (@hardikpandya7) November 16, 2021