5 முறை கோப்பையை வெல்ல இதுதான் காரணம் - குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறிய ரகசியம்!
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்றைய தினத்தில் அகமதாபாத்தில் கோலகலமாக நரேந்திர மோடி மைதானத்தில் நடைப்பெற்றது. இந்த இறுதிப்போட்டியில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின.
முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்களை மட்டுமே குவி க்க 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நிர்ணயிக்கப்பட்டது.
பின்னர் களமிறங்கிய குஜராத் அணி ஆரம்பத்தில் சாஹா 5 ரன்களில் வெளியேற மேத்யூ வேட் 8 ரன்னில் வெளியேறினார். பின்னர் நிதானமாக விளையாடிய கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் சுப்மன் கில் ரன்களை அடிக்க தொடங்கினார்கள்.
34 ரன்கள் இருந்த நிலையில் ஹர்திக் பாண்டியா சாஹல் ஓவரில் கேட்ச் கொடுத்து அவுட் ஆக பின்னர் களமிறங்கிய டேவிட் மில்லர் 32 ரன்களும், கில் 45 ரன்களும் அடித்து, 18.1 ஓவர்களில் வெற்றியை பறித்தனர்.
இதன் மூலம் நடப்பு தொடரிலேயே கோப்பையை கைப்பற்றி குஜராத் அணி சாதனை படைத்தது. இந்நிலையில், இந்த வெற்றியை குறித்து பேசிய குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, இந்த போட்டி சிறப்பாக அமைந்தது.

பாண்டியாவின் நெகிழ்ச்சி
ஒரு அணியாக அனைவரும் சிறப்பாக செயல்பட்டால் வெற்றி கிடைக்கும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. எங்கள் அணியை சுற்றி நல்ல சூழ்நிலை நிலவியது. நானும், பயிற்சியாளர் ஆசிஷ் நெக்ராவும் நல்ல பவுலர்களுடன் களம் இறங்க வேண்டும் என்று நினைத்தோம்.
பேட்ஸ்மேன்களுக்கு சரியான பங்களிப்பை வழங்கியதால் எளிதாக வெற்றி பெற முடிந்தது. டி20 போட்டியை பொறுத்தவரை அதிக முறை பேட்ஸ்மேன்களின் ஆட்டம் மூலம் தான் வெற்றி கிடைக்கும். அதே நேரத்தில் பவுலர்களும் சில போட்டிகளில் வெற்றி பெற்று கொடுப்பார்கள்.
எங்கள் அணியில் இரண்டுமே சிறப்பாக அமைந்தது. மேலும், இந்த கோப்பையுடன் சேர்த்து நான் 5 முறை பைனலில் வெற்றி பெற்று இருக்கிறேன் இது மிகச் சிறப்பான ஒன்று.
இனிவரும் பயணத்திற்கு எங்கள் அணி பெற்ற இந்த வெற்றி ஒரு துவக்கமாக அமையும். கேப்டனாக முதல் தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது மகிழ்ச்சியை தருகிறது என ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
CHAMPIONS ? This is for all the hard work we’ve put in! Congratulations to all the players, staff, fans ❤️❤️❤️ @gujarat_titans pic.twitter.com/zEeqdygBEy
— hardik pandya (@hardikpandya7) May 29, 2022