20 வருடங்களுக்கு பின்னர் தாயான இளம் நடிகையின் அம்மா! தங்கைக்கு பெயர் சூட்டு விழா... என்ன பெயர் தெரியுமா?
பாக்கியலட்சுமியின் மகளாக நடித்து வருபவர் இனியா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை நேகா மேனன்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சித்தி 2, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற பிரபலமான தொடர்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
அதுவும் இல்லாமல் குழந்தை நட்சத்திரமாக நாரதன், ஜாக்சன் துரை போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
நடிகை நேகா மேனனுக்கு தற்போது 19 வயது ஆகிறது. இந்நிலையில் தனது குடும்பத்தில் நடந்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி பற்றி அவர் தற்பொழுது பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் தனது தாய் கர்ப்பமாக இருப்பதாகவும், அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்து இருப்பதாகவும், தனது தங்கை மருத்துவமனையில் நன்றாக இருக்கிறார் என்றும் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.
இந்நிலையில் அவரது தங்கைக்கு தற்போது பெயர் சூட்டு விழா நடைபெற்றுள்ளது.
குழந்தைக்கு சாஹிதி என்று பெயரிட்டுள்ளனர்.