இருள் நீங்கி வாழ்வில் ஒளி பரவ அனைவருக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்கள்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எமது வாசகர்களுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் மனிதன் வலைத்தளம் பெருமகிழ்ச்சி அடைகிறது.
தீபாவளி பண்டிகையானது, அனைவரது அபிலாசைகளை நிறைவேற்றி சிறந்த ஒரு எதிர்காலத்தை பெற்றுக்கொடுக்கும் ஆரம்பமாகும்.
இத்தனை நாட்கள் இருளில் இருந்த எம் அறிவு, ஞானம் உண்மை, ஒற்றுமை, நம்பிக்கை மற்றும் கலாச்சாரம் என்பவற்றை இந்நாள் நினைவூட்டுகிறது.
இன்பங்கள் நிலைத்து, துன்பங்கள் நீங்கி.. எல்லா மனிதரும் சமன் என்ற அறம் வெல்லவும் அநீதி தோற்கவும் ஓர் அடையாளத்திருநாளாக அமைய தீபாவளித் திருநாளை நம்பிக்கையுடன் வரவேற்போம்.
தீபத்திருநாளை கொண்டாடும் எமது வாசகர்களுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் மனிதன் குழுமம் பெருமை கொள்கிறது.
இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |